மின்-சிகரெட் மூலம் புகைபிடிக்கும் போக்கு 4 மடங்கு அதிகரிப்பு

மின்-சிகரெட் மூலம் புகைபிடிக்கும் போக்கு 4 மடங்கு அதிகரிப்பு

1 mins read
690738d1-5a2f-4439-bcde-e902cf99d0e2
மின்-சிக­ரெட்­பயன்­ப­டுத்­திய, வைத்­தி­ருந்த குற்­றங்­க­ளுக்­கா­கக் கடந்த ஆண்டு 4,916 பேர் பிடி­பட்­ட­னர். படம்: பிக்ஸாபே -

சட்­ட­வி­ரோத திர­வப் புகை­பி­டித்­தல் அல்­லது மின்-சிக­ரெட் புகை­பி­டித்­தல் கடந்த ஆண்டு நான்கு மடங்கு அதி­க­ரித்­த­தாக சுகா­தார அறி­வி­யல் ஆணை­யத்­தின் அண்­மைய புள்­ளி­வி­வ­ரம் தெரி­விக்­கிறது. மின்-சிக­ரெட்­பயன்­ப­டுத்­திய, வைத்­தி­ருந்த குற்­றங்­க­ளுக்­கா­கக் கடந்த ஆண்டு 4,916 பேர் பிடி­பட்­ட­னர்.

2020ஆம் ஆண்டு பிடி­பட்ட 1,266 பேரைக் காட்­டி­லும் இது நான்கு மடங்கு அதி­கம். 2021ஆம் ஆண்­டில் இந்­தக் குற்­றத்­துக்­காக 4,697 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

திரவ புகை­பி­டித்­தல் சிங்­கப்­பூ­ரில் தடை செய்­யப்­பட்டு உள்­ளது. இதனை மீறு­வோ­ருக்கு அதி­க­பட்­ச­மாக $2,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­படும்.

சிக­ரெட் வாயி­லா­க­வும் மின்-சிக­ரெட் வாயி­லா­க­வும் புகை­பி­டிக்­கும் போக்கு பற்றி கடந்த ஆண்டு செப்­டம்­ப­ரில் மிலியு என்­னும் அமைப்பு இங்கு ஆய்வு ஒன்றை மேற்­கொண்­டது.

புகை­பி­டிக்­கும் பெரி­யோ­ரில் 4.3 விழுக்­காட்­டி­னர் ஆவி­யாக்­கும் கருவி போன்ற மாற்­றுப் பொருள்­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது ஆய்­வில் தெரி­ய­வந்­தது.

2021 செப்­டம்­ப­ரில் 3.9 விழுக்­கா­டாக இருந்த இந்த விகி­தம் கடந்த ஆண்டு 10 விழுக்­காடு அதி­க­ரித்­தது. மேலும், 2021 முத­லாம் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 43 விழுக்­காடு அதி­கம். ஆவி­யாக்­கும் கருவி அல்­லது மின்-சிக­ரெட்­டு­களில் மின்-திர­வ­மும் சிறிய மின்­க­ல­மும் இருக்­கும்.

இந்­தத் திர­வத்தை மின்­னேற்றி மூலம் ஆவி­யாக்கி அதனை உள்­ளி­ழுக்­கும் போக்கு அண்மைய ஆண்டுகளாகக் காணப்படுகிறது. மாம்­ப­ழம், தர்­பூ­சணி, கிரீன் டீ போன்ற பல்­வேறு வாச­னை­களில் மின்-திர­வம் மின்-சிக­ரெட்­டு­களில் அடைக்­கப்­ப­டு­கிறது.