மூன்றாண்டுகளுக்குப் பிறகு சீனப் புத்தாண்டை கொவிட்-19 கட்டுப்பாடுகளின்றி கொண்டாட சீனாவில் ஏராளமான ஊழியர்கள் நீண்ட விடுப்பில் சென்றிருப்பதால் சிங்கப்பூருக்கான பொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்படும் என தொழில்துறை யினர் கூறுகின்றனர்.
ஊழியர் பற்றாக்குறையால் சீனாவில் உள்ள தொழிற்சாலைகள் வரும் வாரங்களில் மூடப்பட்டு இருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக 'கண்டெய்னர் எக்ஸ்சேஞ்ச்' இணைய வர்த்தக தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் ரோயிலாஃப்ஸ் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்களும் வாடிக்கையாளர்களும் தாமதத்துடன், விநியோக இடையூறுகள் காரணமாக அதிக விலையையும் எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாண்டு கட்டுப்பாடுகளை சீனா திடீரென்று விலக்கியதும் சீனப் புத்தாண்டு முன்கூட்டியே வருவதும் ஊழியர் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்கள் என்றார் 'டிஎம்எக்ஸ்' ஆலோசனை நிறுவன அதிகாரி டீன் ஜோன்ஸ்.

