உலக வடிவமைப்பு நகராக சிங்கப்பூரை உருவாக்க விருப்பம்

உலக வடிவமைப்பு நகராக சிங்கப்பூரை உருவாக்க விருப்பம்

1 mins read
f96d5c4e-794e-43e7-97e5-d3eab4962c08
பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தில் பத்­தாண்­டு­க­ளுக்கு மேல் பணி­யாற்­றிய திரு­வாட்டி டாவ்ன் லிம் (படம்), கடந்த ஜூன் மாதம் சிங்­கப்­பூர் வடி­வ­மைப்பு மன்­றத்­தில் இணைந்­தார். படம்: பெனொரெமிக் பப்லிஷிங் -

சிங்­கப்­பூ­ரின் வடி­வ­மைப்பு முக­வை­யான சிங்­கப்­பூர் வடி­வ­மைப்பு மன்­றம் (டிஎஸ்ஜி) பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தின் துணை அமைப்பு.

வர்த்­த­கங்­களை வளர்க்க, புத்­தாக்­கத்தை வழி­ந­டத்த, வாழ்க்கையை மேம்­படுத்த என எல்லா அம்­சங்­க­ளி­லும் வடி­

வ­மைப்­பைப் பயன்­ப­டுத்­தும் நோக்­கம் கொண்­டது இந்த அமைப்பு.

பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கத்­தில் பத்­தாண்­டு­க­ளுக்கு மேல் பணி­யாற்­றிய திரு­வாட்டி டாவ்ன் லிம் (படம்), கடந்த ஜூன் மாதம் சிங்­கப்­பூர் வடி­வ­மைப்பு மன்­றத்­தில் இணைந்­தார்.

அந்த அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­ந­ராக பதவி ஏற்ற அவர், அண்­மை­யில் முதன்­மு­றை­யாக 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தித்­தா­ளி­டம் பேசியபோது, "உலகை மாற்­றி­ய­மைக்­கும் வல்­ல­மை­பெற்ற நீடித்த நிலைத்­தன்மை, தொழில்­நுட்­பம் போன்றவற்­றின் வடி­வ­மைப்­புப் பாதை­யில் சிங்­கப்­பூரை நிலை­நி­றுத்த வேண்­டி­யது அவ­சி­யம்," என்­றார்.

"சிங்­கப்­பூ­ருக்­கென தனித்­துவ வடி­வ­மைப்­புத் திறன் உள்­ளது. உல­க­ளவி­லான நமது தலை­மைத்­து­வத்தை அதன்­மூ­லம் உரு­வாக்கி வரு­கி­றோம்.

"குறிப்­பாக, தாக்­கத்தை ஏற்­

ப­டுத்­தக்­கூ­டிய வடி­வ­மைப்பு மற்­றும் நீடித்து நிலைக்­கக்­கூ­டிய கட்­டட வடி­வ­மைப்­புக் கலை­யில் நமது பங்கு உண்டு. அத­னால், நியூ­யார்க், லண்டன், கோபன்­ஹேகன் போன்ற வடி­வ­மைப்­பில் சிறந்த நக­ரங்­க­ளு­டன் சிங்­கப்­பூரை வரி­சைப்­ப­டுத்த விரும்­பு­கி­றோம்," என்று கூறிய திரு­வாட்டி லிம், உள்ளூர் வடிவமைப்புத் திறனாளர்களை உருவாக்குவதில் ஆர்வமாக உள்ளார்.