அடுத்த 10 நாள்களுக்கு மழை விடாது

சீனப் புத்­தாண்­டின்­போது விடாது பெய்த மழை, அடுத்த பத்து நாள்­க­ளுக்­குத் தொட­ர­வுள்­ளது.

அடுத்த ஒன்­பது நாள்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் இடி­மழை பெய்­யும் என்று வெதர்.காம் இணை­யத்­ த­ளம் முன்­னு­ரைத்­துள்­ளது.வெப்ப­ நிலை குறைந்­த­பட்­சம் 24 டிகிரி செல்­சி­ய­சி­லி­ருந்து அதி­க­பட்­சம் 30 டிகிரி செல்­சி­யஸ் வரை இருக்­கும் என்­றும் அது கூறி­யது.

சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலை­யம் இன்று வானிலை அதி­க­பட்­சம் 32 டிகிரி செல்­சி­ய­சாக இருக்­கக்­கூ­டும் என்­றது. வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை 29ஆம் தேதி வானிலை 22 டிகிரி செல்­சி­ய­சுக்குக் குறை­ய­லாம் என்­றும் அது நேற்று முன்­னு­ரைத்­தி­ருந்­தது.

மழை தொடர்­வ­தால் பெரும்­ பா­லும் வெயி­ல­டிக்­கும் சிங்­கப்­பூர். பனி­சூழ்ந்த குளிர்­கா­லச் சுற்­று­லாத் தலம்போல காட்சி அளிக்­கிறது.

பரு­வ­மழை பெய்­து­வ­ரும் தற்­போ­தைய நிலை­யில் பலத்த காற்று அதி­க­ரித்­துள்­ள­தால் ஜன­வரி முழு­வ­தும் மழை நீடிக்­கும் என்று சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலை­யம் கடந்த ஜன­வரி 16ஆம் தேதி தெரி­வித்­தி­ருந்­தது.

பெரும்­பா­லான நாள்­களில் வானிலை 24 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 33 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­டி­ருக்­கும் என்­றும் சில நாள்­கள் மட்­டும் 33 டிகிரி செல்­சி­யசை அது எட்­ட­லாம் என்­றும் வானியை ஆய்வு நிலை­யம் அப்­போது கூறி­யது.

சீனப் புத்­தாண்டு நேரத்­தில் மழை பெய்­வ­தால் சில­ருக்­குப் பய­ணத்­தில் சிர­மம் ஏற்­பட்­டது.

டனர்ன் ரோட்­டில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் மரம் விழுந்­ததை அடுத்து, அங்­கி­ருந்­து­ எஸ்பி­எஸ் டிரான்­சிட் பேருந்து சேவை எண் 154 கிட்­டத்­தட்ட இரண்டு மணி­நே­ரத்­துக்கு நக­ர­வில்லை. அதில் பயணிகள் சிலர் சிக்கியிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!