கேகே: சிசுக் கண்காணிப்பு முறையை மாற்றக்கூடும்

கேகே: சிசுக் கண்காணிப்பு முறையை மாற்றக்கூடும்

1 mins read
03c6de40-3495-4fa3-b886-4afbec87469a
-

கேகே மக­ளிர் சிறார் மருத்­து­வ­மனை, புதி­தா­கப் பிறந்த சிசுக்­களை மருத்­து­வ­ம­னை­யில் உள்ள மற்ற பிரி­வு­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கும் வரை அவற்­றின் உயிர் நாடி­யைத் தொடர்ந்து கண்­கா­ணிப்­பது பற்றி பரி­சீ­லித்து வரு­கிறது. 2021ஆம் ஆண்டு ஏப்­ர­லில் மூளை­யில் பாதிப்பு ஏற்­பட்டு 11 நாள் சிசு அங்கு இறந்­ததை அடுத்து அது பற்றி ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.

அந்த ஆண்­ம­கவு பிறந்த பின் சுமார் 53 நிமி­டத்­துக்கு அதன் உயிர் நாடி கண்­கா­ணிக்­கப்­பட்டு பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்று மரண விசா­ரணை நீதி­பதி ஆடம் நக்­கோடா கூறி­னார். தொடர் கண்­கா­ணிப்பு இல்­லா­தது சிறந்த நடை­முறை இல்லை என்று அண்­மை­யில் வெளி­யி­டப்­பட்ட அறிக்கை ஒன்­றில் அவர் தெரி­வித்­தார்.

வழக்­க­மான பிர­சவ முயற்சி தோல்வி அடைந்­த­தால் அவ­சர அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டது. பிறந்த சிசு­வின் கழுத்­தில் தொப்­புள் கொடி மூன்று முறை சுற்­றி­யி­ருந்­தது.

அவை அகற்­றப்­பட்டு பிள்­ளைக்கு செயற்கை உயிர்­வாயு சிகிச்சை வழங்­கப்­பட்­டது. பின்­னர் சுவா­சக்­கு­ழாயை அழுத்தி சிகிச்சை வழங்­கப்­பட்­டது.

பிறகு, சிசு­வின் உயிர் நாடி மேம்­பட்­டது. அது அசைந்து அழு­தது. ஆனால் பார்­வை­யா­ளர் அறைக்கு மாற்­றப்­பட்ட பிறகு சிசு­வின் நிலைமை மோச­மாகி பின்­னர் இறந்­தது.