அதிகமானோர் மின்னிலக்கப் பணத்தைப் பரிசளித்தனர்

அதிகமானோர் மின்னிலக்கப் பணத்தைப் பரிசளித்தனர்

2 mins read
2258d79d-c5e9-4ce0-8b30-b20b18f0f835
-

இந்த சீனப் புத்­தாண்­டில் அதி­க­மா­னோர் மின்­னி­லக்க 'சிவப்பு உறை­களை' (ஹொங் பாவ்) பயன்­ ப­டுத்­தி­யுள்­ள­னர். வச­திக்­கா­க­வும் அதிர்ஷ்­ட­மான இலக்­கத்­தில் அன்­ப­ளிப்­பு­களை வழங்­க­வும் அதிக வாடிக்­கை­யா­ளர்­கள் மின்­னி­லக்­கத்­தில் அன்­ப­ளிப்­புத் தொகையை மாற்­றி­னர் என்று வங்­கி­கள் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் தெரி­வித்­தன.

எடுத்­துக்­காட்­டாக, டிபி­எஸ் வங்கி அதன் 'கியூ­ஆர்' அன்­ பளிப்பு அட்­டை­கள் கடந்த ஆண்­டை­விட இந்த ஆண்டு 30% அதி­கம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாகக் கூறியது.

இந்த அட்­டை­க­ளைப் பெறு­வோர் அதி­லுள்ள 'கியூ­ஆர்' குறி­யீட்டை வருடி, அளிக்­கப்­பட்ட தொகை­யைப் பெற்­றுக்­கொள்­ள­லாம். இவ்­வாறு 'கியூ­ஆர்' அன் ­ப­ளிப்பு அட்­டை­களில் ஏற்­றப்­பட்ட தொகை கடந்த ஆண்டைவிட 40 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

இந்த ஆண்டு சீனப் புத்­தாண்­டுக்கு முதல் நாளும் புத்­தாண்­டின் முதல் நாளி­லும் கிட்­டத்­தட்ட $5 மில்­லி­யன் 'கியூ­ஆர்' அன்­ பளிப்பு அட்­டை­களில் ஏற்­றப்­பட்­ட­தாக டிபிஎஸ் வங்கி குறிப்­பிட்­டது.

2021ஆம் ஆண்­டின் அதே இரண்டு நாட்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இது 55 விழுக்­காடு அதிக­ மா­கும். சிவப்பு உறை­களை மின்­னி­லக்க முறை­யில் தயா­ரிப்­ப­தும் விநி­யோ­கிப்­ப­தும் எளி­மை­யாக இருப்­ப­தால் கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்ட நிலை­யி­லும் இதற்கு வர­வேற்பு இருப்­ப­தாக டிபி­எஸ் வங்கி குழு­மத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­மதி டயான் சாங் கூறி­னார்.

சீனப் புத்­தாண்­டின் முதல் நாளில் தனது மின்­னி­லக்க அன்­ப­ளிப்­பின் அன்­றாட பயன்­பாடு நான்கு மடங்கு அதி­க­ரித்­த­தாக ஓசி­பிசி வங்கி தெரி­வித்­தது.

முந்­தைய ஆண்­டை­விட இந்த சீனப் புத்­தாண்டு காலத்­தின் 15 நாட்­களில் குறைந்­தது 20 விழுக்­காடு கூடு­த­லாக மின்­னி­லக்க அன்­ப­ளிப்­பு அனுப்­பப்­படும் என்று ஓசி­பிசி வங்கி மதிப்­பி­டு­கிறது.

யுஓபி வங்­கி­யில், சீனப் புத்­தாண்­டுக்கு முதல் நாளி­லும் புத்­தாண்­டின் முதல் நாளி­லும் மின்­னி­லக்க சிவப்பு உறை­கள் மூலம் அனுப்­பப்­பட்ட அன்­பளிப்­புத் தொகை­யின் மொத்த மதிப்பு ஆண்டு அடிப்­ப­டை­யில் 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக உயர்ந்­துள்­ளது என்று அந்த வங்கி தெரி­வித்­தது.

புதிய நோட்­டு­கள், பாரம் ­ப­ரிய சிவப்பு உறை­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தை­விட வாடிக்­கை­யா­ளர்­கள் மின்­னி­லக்க சிவப்பு உறை­களை சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏற்­ற­தாக பார்க்­கி­றார்­கள். மேலும் அவர்­க­ளால் $8.88, $88 போன்ற அதிர்­ஷ­ட­மான தொகை­க­ளை­யும் எளி­தாக பரி­ச­ளிக்க முடி­வதாக யுஓபி வங்­கிக் குழு­வின் தனிப்­பட்ட நிதிச் சேவை­கள் பிரி­வின் தலை­வர் ஜாக்­கு­லின் டான் கூறி­னார்.