சிராங்கூன் கடைவீடுகளின் விற்பனை மும்முரமாக இருந்தது

சிராங்கூன் கடைவீடுகளின் விற்பனை மும்முரமாக இருந்தது

1 mins read
6e6178d2-21d6-4b97-be1b-095ca55f07bb
-

சிங்­கப்­பூ­ரில் கடை­வீ­டு­க­ளின் விற்­பனை 2022ன் இரண்­டாம் பாதி­யில் குறைந்­தது. நைட் ஃபிராங்க் நிறு­வ­னம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை அதைத் தெரி­வித்­தது.

2022 ஜூலைக்­கும் டிசம்­ப­ருக்­கும் இடையே 67 கடை­வீ­டு­கள், மொத்­தம் $625.2 மில்­லி­ய­னுக்­குக் கைமா­றின. ஆனால் அவற்­றின் ஒட்­டு­மொத்த விலை 2022ன் முதல் பாதி­யை­விட 35.6 விழுக்­காடு குறைந்­தது.

சென்ற ஆண்­டில் மொத்­த­மாக 187 கடை­வீ­டு­கள் விற்­கப்­பட்­டன. அவற்­றின் ஒட்­டு­மொத்த பரி­வர்த்­தனை விலை $1.6 பில்­லி­யன் ஆகும். ஒப்­பு­நோக்க 2021ல் $1.9 பில்­லி­ய­னுக்கு 244 கடை­கள் விற்­கப்­பட்­டன. இது ஆக அதிக விலை­யா­கும்.

கடை­வீ­டு­களில் கிடைக்­கும் வாட­கை­யை­விட அவற்றை வாங்கு­வ­தற்­கான வங்­கிக் கடன் வட்டி அதி­க­ரித்­த­தால் பல முத­லீட்­டா­ளர்­கள் பின்­வாங்­கி­யுள்­ள­தாக நைட் ஃபிராங்க் கூறி­யது.

இருப்­பி­னும் சிராங்­கூன், ஃபேரர் பார்க் வட்­டா­ரக் கடை­ வீ­டு­க­ளின் விற்­பனை மும்­மு­ர­மாக நடந்­தது. 2022ன் பிற்­பா­தி­யில் $182.5 மில்­லி­யன் மொத்த மதிப்­பில் 26 கடை­வீ­டு­கள் விற்­கப்­பட்­டன. மற்ற எல்லா வட்­டா­ரங்­க­ளி­லும் 10க்கும் குறை­வான கடை­வீ­டு­களே விற்­கப்­பட்­டன.

ஜாலான் புசா­ரில், பழ­மைப் பாது­காப்­புத் திட்­டத்­தி­லுள்ள ஐந்து கடை­வீ­டு­கள் ஆக அதி­க­மாக $40 மில்­லி­ய­னுக்கு விற்­பனை ஆகின.

2021ல் $4.1 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்ட ரோவெல் ரோடு கடை­வீடு ஒன்று சென்ற அக்­டோ­ப­ரில் $4.9 மில்­லி­ய­னுக்­குக் கைமா­றி­யது. இது 21 விழுக்­காடு அதி­க­மா­கும்.