தனியார் இரவுநேரப் பேருந்துச் சேவை

தனியார் இரவுநேரப் பேருந்துச் சேவை

1 mins read
3feb6ecc-1505-4701-8502-a8dab02f63ea
-

வரும் 27ஆம் தேதியிலிருந்து மத்திய வர்த்தக வட்டாரத்தில் இருந்து குடியிருப்பு வட்டாரங்களுக்கு ஒருவழி தனியார் இரவுநேர பேருந்துச் சேவைகள் வழங்கப்படும். வெள்ளி, சனி, பொது விடுமுறைக்கு முந்திய இரவுகளில் அவை அதிகாலை 2.30 மணி வரை செயல்படும். என்எஸ்-1, என்எஸ்-2 என்ற அச்சேவைகளை ஏ அண்ட் எஸ் நிறுவனம் வழங்கும்.

என்ஸ் -1, கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, லிட்டில் இந்தியா, அங் மோ கியோ, வழியாகச் சென்று பொங்கோலில் முடியும். என்எஸ்-2 நியூட்டன், ஈசூன், செம்பவாங் சென்று உட்லண்ட்சில் முடியும்.

கட்டணம் ஈசி-லிங்க் வழியாக $4.50, ரொக்கமாக $5 வசூலிக்கப்படும்.