தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஸ்தாராவின் அமெரிக்க விமானச் சேவை நிறுத்தம்

2 mins read
a92d3520-c0b2-45a1-830d-90e8a6066f17
-

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் இந்திய கூட்டு நிறுவனமான விஸ்தாரா, அமெரிக்காவுக்கு நேரடி விமானச்சேவை தொடங்குவதை

தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

போயிங் 787 டிரீம்லைனர் விமானங்கள் குறித்த நேரத்தில் கிடைக்காததால் விஸ்தாரா இம் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

"தாமதம் குறித்து அமெரிக் காவுடன் ஒரு கட்டத்தில் பேச்சு நடத்தினோம்," என்று விஸ்தாரா வின் தலைமை நிர்வாகி வினோத் கண்ணன் செவ்வாய்க்கிழமை நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

"போயிங் 787 விமானங்கள் ஒரே சமயத்தில் கிடைக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கக் கூடும். இதனால் அமெரிக்காவுக் கான நேரடி விமானச் சேவை களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.

விஸ்தாரா, சிங்கப்பூரின் எஸ்ஐஏ, இந்தியாவின் டாடா குழுமம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும்.

எஞ்சிய நான்கு டிரீம்லைனர் விமானங்களும் 2024 மார்ச் மாதத்திற்குள் கிடைக்கும் என விஸ்தாரா எதிர்பார்க்கிறது.

அவற்றில் முதல் விமானம் வருகிற ஏப்ரல் மாதம் விநி யோகிக்கப்படுகிறது.

"இதர போயிங் விமா­னங்­கள் எப்­போது கிடைக்கும் என்­ப­தற்­கான விளக்­கத்­திற்கு காத்­தி­ருக்­கி­றோம்," என்று கண்­ணன் தெரி­வித்­தார்.

சென்ற ஆகஸ்ட் மாதம் அமெ­ரிக்க ஒழுங்­கு­முறை ஆணை­யம் 787 விமா­னங்­களை மீண்­டும் விற்பனை செய்ய பச்சை கொடி காட்­டி­யது.

கடந்த 2020 பிற்­ப­கு­தி­யில் அத்­த­கைய விமா­னங்­களில் குறை­பா­டு­கள் கண்டுபிடிக்­கப்­பட்­டன. இதை­ய­டுத்து 787 ரக விமா­னங்­க­ளின் விநி­யோ­கம் நிறுத்­தப்­பட்­டன.

இருந்­தா­லும் ஏற்­கெ­னவே சேவை­யில் இருந்த 787 ரக விமா­னங்­கள் தொடர்ந்து இயக்க அனு­ம­திக்­கப்­பட்­டன.

இந்த நிலை­யில் லண்­டன், பாரிஸ், ஃபிராங்க்­ஃபர்ட் போன்ற குறைந்த விமா­னங்­கள் தேவைப் படு­கின்ற நக­ரங்­க­ளுக்கு விமா­னச் சேவை­களை வழங்க விஸ்தாரா திட்­ட­மிட்­டுள்­ளது.

மும்பை போன்ற இந்­தி­யா­வின் இதர பகு­தி­க­ளு­டன் அனைத்­து­லக நக­ரங்­களை இணைக்­கும் விமா­னச் சேவை­கள் படிப்­ப­டி­யாக அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் கண்­ணன் மேலும் தெரி­வித்­தார்.

விஸ்தாரா நிறு­வ­னம் தற்­போது மூன்று 787 ரக விமா­னங்­களை சேவை­யில் வைத்­துள்­ளது. அவற்­றில் ஒன்று பயன்­ப­டுத்­தப்­பட்ட விமா­ன­மா­கும். மூன்று ஆண்டு குத்­த­கைக்கு அது எடுக்­கப்­பட்­டுள்­ளது.

மத்­திய கிழக்கு நாடு­களில் நிறுத்­தா­மல் அமெ­ரிக்­கா­வுக்கு நிறுத்தமில்லா விமா­னச் சேவை­களை வழங்­கு­வ­தால் மற்ற உள்­ளூர் விமா­னங்­க­ளை­விட ஏர் இந்­தி­யா­வுக்­குச் சாத­மான அம்­சம் உள்­ளது.