'டீம்ஸ்', அவுட்லுக் செயலிகள் செயலிழந்தன

'டீம்ஸ்', அவுட்லுக் செயலிகள் செயலிழந்தன

1 mins read
eabea1f3-de84-4c59-8338-b7525ef44dfb
-

டீம்ஸ், அவுட்லுக் செயலிகளை செயலிழக்கச் செய்த கணினி கட்டமைப்புக் கோளாறு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நேற்று தெரிவித்தது.

நேற்று மாலை 4.00 மணியளவில் மைக்ரோ சாஃப்ட் 365யின் பல்வேறு சேவைகளை பயனீட்டாளர் களால் பயன்படுத்த முடிய வில்லை. ஷேர்பாய்ண்ட் ஆன்லைன், ஒன்டிரைவ் உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டதாக புகார் வந்ததாகவும் அது தெரிவித்தது. இவற்றில் பெரும்பாலான செயலிகள் பள்ளிகளிலும் நிறுவனங் களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோளாறு குறித்து மைக்ரோசாஃப்ட் விசாரித்து வருகிறது.