காவலர் ஒருவரை இழுத்துச்சென்ற மசரட்டி கார் ஓட்டுநரின் காரை ஏன் பறிமுதல் செய்யக் கூடாது என்பது தொடர்பான வழக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில் லீ செங் யான், காவல் அதிகாரி ஒருவரை தனது மசரட்டி காரால் 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்றார்.
இந்த வழக்கில் லீக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கார் ஓட்டவும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சாலைச் சட்டப்படி அவரது ஆடம்பரக் காரை பறிமுதல் செய்வதற்கான வழக்கு நடைபெற்று வருகிறது.
நேற்று அவரது சகோதரியிடம் விசாரணை நடைபெற்றது.
அப்போது, ஜப்பானில் படிக்கும் லீயின் இரு மகள்களுக்கு பெற்றோர் உதவி வருவதாக சகோதரி தெரிவித்தார்.
மேலும் சட்டச் செலவுகளுக்காக பெருமளவு பணத்தை பெற்றோரிடமிருந்து லீ கடன் வாங்கி உள்ளார் என்றும் தனது தாயார் நகைகளை அடகு வைத்து பணம் கொடுத்ததாகவும் அவர் சொன்னார். பெற்றோரிடம் கடனை அடைப்பதற்காக அவர்களிடம் காரை லீ அடமானம் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். விசாரணை தொடர்கிறது.

