சிங்கப்பூரில் முதல் முறையாக நடைபெறும் ஆசிய-பசிபிக் விமானப் பாதுகாப்பு மாநாடு

சிங்கப்பூரில் முதல் முறையாக நடைபெறும் ஆசிய-பசிபிக் விமானப் பாதுகாப்பு மாநாடு

2 mins read
55ee19c1-30fa-4356-884d-e49d05018a4d
-

சிங்­கப்­பூ­ரில் முதல் முறை­யாக ஆசிய-பசி­பிக் விமா­னப் பாது­காப்பு மாநாடு நடை­பெ­று­கிறது.

மார்ச் 22 முதல் 24ஆம் தேதி வரை நடை­பெ­றும் இந்த மூன்று நாள் மாநாட்­டில் உல­கம் முழு­வ­தும் இருந்து 300க்கும் மேற்­பட்ட அர­சாங்க, தொழில்­து­றைத் தலை­வர்­கள் பங்­கேற்­கின்­ற­னர் என்று சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்கு­வ­ரத்து ஆணை­ய­மும் விமா­னப் பாது­காப்பு அற­நி­று­வ­ன­மும் கூட்­டாக வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தன.

மரினா பே சேண்ட்­ஸில் உள்ள சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மண்­ட­பத்­தில் தொடக்க மாநாடு நடை­பெ­றும்.

இதில் வட்­டார அள­வி­லான பாது­காப்­புச் சவால்­கள், ஏன், எப்­படி பாது­காப்­புக் குறை­பாடுகள் ஏற்­ப­டு­கின்­றன, விமா­னப் பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­கள், மனி­தர்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­பது, தரவு மற்­றும் தொழில்­நுட்­பங்­களை மேம்­ப­டுத்­து­வது உள்­ளிட்­டவை குறித்து விவா­திக்­கப்­படும் என்று கூட்டு அறிக்கை தெரி­வித்­தது. கொள்ளை நோயி­லி­ருந்து மீண்டு வரும் நிலை­யில் பல்­வேறு சவால்­களை விமா­னத் துறை எதிர்­நோக்­கு­கிறது.

திறன் வாய்ந்த ஊழி­யர் பற்­றாக்­குறை அவற்­றில் ஒன்று.

இந்­தப் பிரச்­சி­னை­களும் மாநாட்­டில் ஆரா­யப்­படும் என்று இரு அமைப்­பு­களும் தெரி­வித்­தன. நிதி நெருக்­கடி கார­ண­மாக சிறந்த சேவை­களை வழங்க முடி­யா­மல் விமான நிறு­வ­னங்­கள் போராடி வரு­கின்­றன.

செயற்கை நுண்­ண­றிவு, ஆளில்லா விமா­னம் செலுத்­தும் முறை போன்ற புதிய தொழில்­நுட்­பங்­க­ளால் விமா­னத் துறை­யில் இடை­யூ­று­கள் ஏற்­பட்டு உள்­ளன. புதிய வாய்ப்­பு­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் அதே வேளை­யில் அபா­யங்­க­ளை­யும் எதிர்­நோக்க வேண்­டி­யி­ருக்­கிறது என்று அவை கூறின. சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­தின் இயக்­கு­நர் ஜென­ரல் ஹான் கோக் ஜுவான், இவ்­வட்­டார மாநாட்டை விமா­னப் பாது­பாப்பு அற­நி­று­வ­னத்­து­டன் கூட்­டாக நடத்­து­வ­தில் ஆணையம் பெருமை கொள்­கிறது என்­றார்.

"வட்­டார நாடு­கள் தங்­க­ளுக்­கென தனிப்­பட்ட கொள்கை களைக் கொண்­டி­ருந்­தா­லும் எல்­லை­க­ளுக்கு இடை­யி­லான விமா­னத் துறை­யில் விமா­னப் பாது­காப்பை உறுதி செய்­யும் ஒத் துழைப்பு அவ­சி­யம்," என்று அவர் மேலும் கூறி­னார்.

உலக நாடு­க­ளி­லி­ருந்து பிர­மு­கர்­கள் மாநாட்­டில் பங்­கேற்பதால் ஏற்­பா­டு­கள் சிறப்­பாக செய்­யப்­பட்டு வரு­கின்­றன.