ஜூரோங் தீவில் எட்டு மடங்கு பெருகும் மின்சாரம்

ஜூரோங் தீவில் எட்டு மடங்கு பெருகும் மின்சாரம்

2 mins read
336247c4-4800-4788-949b-f7f1a4f3e8b5
-

ஜூரோங் தீவுக்கு சூரி­ய ஒளியி லிருந்து பெறும் மின்­சா­ரத்தை பன்­ம­டங்கு பெருக்க ஜேடிசி பெரும் திட்­டத்தை வகுத்­துள்­ளது.

அதன்­படி அறு­பது ஹெக்­டர் பரப்­ப­ள­வுள்ள தீவின் காலி­யி­டத்­தி­லும் அதி­க­மான கூரை­க­ளி­லும் சூரிய சக்­தித் தக­டு­களை அது பொருத்­த­வி­ருக்­கிறது.

இத­னால் சூரிய சக்­தி­ மின்­சா­ர உற்பத்தி எட்டு மடங்கு அதி­ க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அதா­வது, ஜூரோங்­கில் சுமார் 12.3 மெகா­வாட் முதல் 103.2 மெகா­வாட் வரை­ சூரிய சக்தி மின்­சா­ரம் உற்­பத்­தி­ செய்யப்படும்.

இது, 24,300 நான்­கறை வீவக வீடு­க­ளுக்கு ஓராண்­டுக்­குத் தேவை­யான மின்­சா­ரத்­திற்கு ஈடா­கும் என்று ஜேடிசி தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

ஒப்­பந்­தப் புள்ளியின்கீழ் 84 காற்­பந்து திடல் அள­வுள்ள தற்­கா­லிக காலி­யி­டத்­தில் மட்­டு­மின்றி ஜூரோங் தீவில் உள்ள ஜூரோங் ராக் கேவர்ன்ஸ், ஜூரோங் தீவு சோத­னைச் சாவடி உள்­ளிட்ட ஐந்து கட்­ட­டங்­க­ளின் கூரை­க­ளி­லும் சூரி­யத் தக­டு­கள் பொருத்­தப்­படவிருக்கின்றன.

ஜூரோங் தீவை சுற்­றுப்­பு­றத்­துக்கு கேடு விளை­விக்­காத எரி­பொ­ருள், ரசா­ய­னப் பூங்கா இட­மாக மாற்­றும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக இது இடம்­பெ­று­கிறது.

இந்­தத் திட்­டம் பூர்த்­தி­ய­னால் ஜூரோங் தீவில் நிறு­வப்­படும் சூரி­யத் தக­டு­கள் சிங்­கப்­பூ­ரின் 2030ஆம் ஆண்டு சூரிய சக்­தி­யின் இலக்­கில் ஐந்து விழுக்­காட்டை நிறைவு செய்­யும்.

2030ஆம் ஆண்­டுக்­குள் சுமார் இரண்டு கெகா­வாட் மின்­ சாரத்தை உற்­பத்தி செய்­வ­தற்­கான சூரி­யத் தக­டு­கள் குடி­ய­ர­சில் பொருத்­தப்பட்­டி­ருக்­கும்.

உலகை வெப்­ப­ம­டை­யச் செய்­யும் படிம எரி­பொ­ரு­ளி­லி­ருந்து விலகி சுற்­றுப்­பு­றத்­துக்கு கேடு­ வி­ளை­விக்­காத எரி­பொ­ருளை உற்­பத்தி செய்­ய விரும்பும் சிங்கப் ­பூ­ரின் திட்­டத்­தில் இது முக்­கிய தூணாக இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரில் காற்­றின் வேகம் குறைவு. மேலும் பெரிய துறை­மு­கங்­கள் அமைந்துள்ளதால் அலை­யாற்­றல் மூலம் உற்­பத்தி செய்­யப்­படும் மின்­சா­ரத்­திற்­கான வாய்ப்­பும் வரம்­புக்கு உட்­பட்­டு உள்ளது.

இந்த நிலை­யில் சூரி­யத் தகடு­ கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்­சா­ரத்தை புதுப்­பிக்­கத்­தக்க வள­மாக சிங்­கப்­பூர் கரு­து­கிறது.

சூரி­யத் தக­டு­கள் பொருத்­தும் அள­வுக்கு சிங்­கப்­பூ­ரின் நிலப் ­ப­ரப்­பும் பெரிய அள­வில் இல்லாதது மற்றொரு குறை யாகும்.

இத­னைச் சமா­ளிக்க ஜேடிசி தனது 'சோலார்­ரூஃப்', 'சோலார்­லேண்ட்' திட்­டங்களின் மூலம் 14,000 வர்த்­த­கங்­கள் செயல்­படும் கட்­டங்­க­ளின் கூரை­களில் சூரி­யத் தக­டு­களை அமைக்கத் திட்ட ­மிட்­டுள்­ளது.