மார்ச் 17 முதல் ரமலான் சந்தை ஆரம்பம்

மார்ச் 17 முதல் ரமலான் சந்தை ஆரம்பம்

2 mins read
ccde4995-234b-4ce7-9673-2f1333efd720
-

நோன்­புப் பெரு­நாளை முன்­னிட்டு கேலாங் சிராய் வட்­டா­ரம் வரும் மார்ச் 17 முதல் களை­கட்­ட­வுள்­ளது. வரு­டாந்­திர ரம­லான் சந்தை கிட்­டத்­தட்ட 700 கடை­க­ளு­டன் தொடங்­க­வுள்­ளது. இந்த எண்­ணிக்கை கடந்த ஆண்டு 70ஆக இருந்­தது.

சந்தை துவங்­கும் நாளும் நோன்பு மாதம் தொடங்­கும் நாளும் முந்­தைய ஆண்­டு­களில் ஒன்­றாக அமைந்­திட, இவ்­வாண்டு புது மாற்­றம் ஒன்று செய்­யப்­பட்­டுள்­ளது. இம்­முறை நோன்பு மாதம் தொடங்­கு­வ­தற்கு ஐந்து நாள்­கள் முன்­ன­தா­கவே கேலாங் சிரா­யின் நோன்­புப் பெரு­நாள் ஒளி­யூட்­டு­டன் ரம­லான் சந்­தை­யும் தொடங்­க­வுள்­ளது.

சந்தை 36 நாள்­க­ளுக்கு ஏப்­ரல் 21ஆம் தேதி­வரை நடை­பெ­றும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

சந்தை தின­மும் காலை 10 மணி முதல் இரவு 11.59 மணி வரை செயல்படும். இருப்­பி­னும் நோன்­புப் பெரு­நாள் கொண்­டாடப்­படும் ஏப்­ரல் 22ஆம் தேதி­யன்று மட்­டும் சந்தை அன்று காலை 6 மணி வரை இடம்பெறும். இது தொடர்­பில் உள்­துறை, தேசிய வளர்ச்­சிக்­கான துணை அமைச்­சர் முகம்­மது ஃபைஷல் இப்­ரா­ஹிம் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

ஆக அதிக நாள்­க­ளுக்கு நீடிக்­கும் சந்­தை­யாக இது அமைந்­தி­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

வரு­கை­யா­ளர்­க­ளுக்­குக் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் பொருள்­களைக் கிடைக்­கச் செய்­வதே முக்­கி­ய­ம் எனக் கரு­தப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சந்தை நடை­பெ­றும் நாள்­களுக்கு சில்­லறை வர்த்­த­கக் கடை­கள் $15,000 வரை வாட­கை­யை­யும் உணவு பானக் கடை­கள் $19,000 வரை வாட­கை­யை­யும் செலுத்­து­வதை எதிர்­பார்க்­க­லாம் என்று சந்­தையை நடத்­தும் குழு­மத்­தைச் சேர்ந்த திரு முகம்­மது முஸ்­தபா ஷா ஜெஹான் கூறி­னார். இத்­து­டன் 'விஸ்மா கேலாங் சிராய்' பகு­தி­யில் உள்­ளூர் தொழில்­மு­னை­வர்­க­ளுக்­காக ஓர் இடம் ஒதுக்­கப்­படும் என்­றும் அங்­குள்ள கடைக்­கான ஒருநாள் வாடகை $55 என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஆடை­க­ளை­யும் ஹலால் உண­வுப் பொருள்­க­ளை­யும் நன்­கொடை அளிக்க விரும்­பு­வோருக்­கா­க­வும் இடம் ஒதுக்­கப்­ப­டு­கிறது. தேவைப்­ப­டு­வோருக்கு உத­விக்­க­ரம் நீட்­டும் நோக்­கில் இந்த இடம் அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக இணைப் பேரா­சி­ரி­யர் ஃபைஷல் கூறி­னார்.

"மக்­கள் 2023ன் சந்­தையை மறக்க முடி­யாத வகை­யில் இனிமையான அனு­ப­வங்­க­ளைப் பெற­வேண்­டும் என்­பதே எங்­களின் விருப்­பம்," என்­றார் அவர்.