சொத்துரிமை மாற்றத்துக்கான மின்னிலக்கத் தளம் 2026ஆம் ஆண்டில் தயார்

1 mins read
f05f41e1-e5b9-413c-a8dc-b36273335b1e
-

தனி­யார், பொதுச் சொத்­து­க­ளுக்­கான உரி­மைப் பத்­தி­ரங்­கள் தற்­போது காகித வடி­வில் உள்ள நிலை­யில், இச்­செ­யல்­மு­றையை முழு­மை­யாக மின்­னி­லக்­க­ம­ய­மாக்­கும் திட்­டத்தை சிங்­கப்­பூர் நில ஆணை­யம் வகுத்­துள்­ளது.

'மின்­னி­லக்க சொத்­து­ரி­மைத் தளம்' (டிசிபி) என்ற இந்­தத் திட்­டம் குறித்து முதன்­மு­த­லில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங் கடந்­தாண்டு அறி­வித்­தார். இதை­யடுத்து, இந்த மின்­னி­லக்­கத் தளத்­துக்­கான பணி­கள் 2026ஆம் ஆண்­டில் நிறை­வு­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மின்­னி­லக்­கத் தளத்தை மூன்று கட்­டங்­க­ளா­கச் செயல்­படுத்­தும் பொறுப்பு, 'டெக் மகிந்தா'விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக நேற்று நடை­பெற்ற உல­க­ளா­விய கப்­பல் போக்­கு­வரத்­துத் துணைக்­கோ­ளத் திட்­டப் புத்­தாக்க சவால் விருது நிகழ்ச்­சி­யில் திரு டோங் தெரி­வித்­தார்.

தற்­போ­தைய செயல்­மு­றை­யின் படி பரி­வர்த்­த­னை­கள் முடி­வ­டைய சுமார் 8 முதல் 12 வாரங்­கள் ஆகின்­றன. இன்­ன­மும் 70% ஆவ­ணங்­கள் காகித வடி­வில் மட்­டுமே இருப்­ப­தா­கக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

'டிசிபி' திட்­டம் குறித்து முதன்­மு­த­லில் 2019ல் பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.