மரினா பே சேண்ட்ஸில் சாதனை அளவு வருவாய்

மரினா பே சேண்ட்ஸில் சாதனை அளவு வருவாய்

1 mins read
d9400419-32bc-4666-b07c-4ef7d92588fa
-

சுற்றுப்பயணத்துறை மீண்டெழும் சூழலில் மரினா பே சேண்ட்ஸில் சூதாட்டம், சில்லறை விற்பனை மூலம் 2022ன் நான்காம் காலாண்டில் சாதனை அளவில் வருவாய் பதிவானது. ஆண்டு அடிப்படையில் மரினா பே சேண்ட்ஸின் நிகர வருவாய் இருமடங்கானது. 2021ன் நான்காம் காலாண்டில் $368 மி. அமெரிக்க டாலர் நிகர வருவாய் பதிவானது. 2022ன் நான்காம் காலாண்டில்

$682 மி. அமெரிக்க டாலர் (S$895 மி.) நிகர வருவாய் பதிவானது. மரினா பே சேண்ட்ஸின் ஹோட்டல் அறைகள் கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் 98.3% நிரப்பப்பட்டன. 2021ல் 79.1% அறைகள் மட்டுமே நிரப்பப்பட்டன. இத்துடன் ஓர் அறைக்கான சராசரி ஒருநாள் கட்டணம் 2021ல் $259 அமெரிக்க டாலராக இருந்து 2022ல் $550 மில்லியனாக அதிகரித்தது.லாஸ் வேகஸ் சேண்ட்ஸின் கீழ் இயங்கி வரும் பெரும்பாலான மக்காவ் சூதாட்டக் கூடங்கள் நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அதே குழுமத்தின் மரினா பே சேண்ட்ஸ் சாதித்துள்ளது.