உள்ளூர் தொழிற்சாலை உற்பத்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி தொடர்ந்து மூன்று மாதங்களாக இறக்கம் கண்டுள்ளது.
இருப்பினும், அதன் சரிவு அஞ்சப்பட்ட அளவுக்கு இல்லை. உற்பத்தியின் மந்தநிலை இன்னும் சிறிது காலத்துக்குத் தொடரும் என்று பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உற்பத்தி அளவு 3.1 விழுக்காடு குறைந்தது. மின்னணுவியல் உற்பத்தி அதிகரித்தபோதிலும் உயிர்மருத்துவ உற்பத்தியின் நிலையற்றதன்மை காரணமாக உற்பத்தி அளவு சரிவு கண்டது.
இந்தத் தரவுகளைப் பொருளியல் மேம்பாட்டுக் கழகம் நேற்று வெளியிட்டது. உயிர்மருத்துவ உற்பத்தியைச் சேர்க்காமல் உற்பத்தி அளவு 0.3 விழுக்காடு கூடியது. உள்ளூர் உற்பத்தி 6.9 விழுக்காடு குறையும் என்று புளூம்பர்க் ஆய்வில் பங்கெடுத்த பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தி குறையவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உற்பத்தி அளவு 3.8 விழுக்காடு குறைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உற்பத்தி முதல்முறையாக வீழ்ச்சி கண்டது. அப்போது மருந்து உற்பத்தி குறைந்தது. டிசம்பர் மாதத்தின் உற்பத்தி அளவு அஞ்சப்பட்ட அளவுக்குக் குறையவில்லை என்றபோதிலும் அது இனி உயரும் என்று முடிவெடுத்துவிட முடியாது என்று ஓசிபிசி வங்கியின் தலைமைப் பொருளியல் நிபுணர் செலினா லிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"இவ்வாண்டின் முதல் காலாண்டில் நிலைமை மோச
மடையக்கூடும். அதன் பிறகு இரண்டாம் காலாண்டிலிருந்து நான்காவது காலாண்டு வரை உற்பத்தி அளவு மேம்படக்
கூடும்," என்றார் அவர்.

