ஜனவரி 15ஆம் தேதியன்று நேப்பாளத்தில் பொக்காரா நகரில் விழுந்து நொறுங்கிய யெட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் பதிவுப் பெட்டிகளிலிருந்து தரவுகளைப் பெறும் பணி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.
நேப்பாள அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சு இப்பணியை மேற்கொள்கிறது.
விமானப் பதிவுப் பெட்டிகளிலிருந்து தரவுகளைப் பெறும் பணி அமைச்சின் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலன்விசாரணைப் பிரிவுக்குச் சொந்தமான நிலையத்தில் நடைபெறும்.
பதிவுப் பெட்டிகளிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் நேப்பாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் விசாரணையை அவர்கள் மேற்கொள்வர் என்றும் அமைச்சு
கூறியது.

