மற்ற நாடுகளின் சுங்கத்துறையுடன் இணைந்து சிங்கப்பூர் சுங்கத்துறை, அனைத்துலகச் சுங்கத்துறை தினத்தை நேற்று அனுசரித்தது.
அனைத்துலகச் சுங்கத்
துறை தினத்தை முன்னிட்டு என்டியுசி அரங்கில் நேற்று பிற்பகல் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது. வேலையில் முழுக் கடப்பாடு கொண்ட ஒன்பது உள்ளூர் சுங்கத்துறை அதிகாரி களுக்கு உலகச் சுங்கத்துறை அமைப்பின் சான்றிதழ் வழங்கப்பட்டது. சான்றிதழ்களை சிங்கப்பூர் சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் திரு டான் ஹுங் ஹூய் வழங்கினார்.
அடுத்த தலைமுறையை வளர்த்தல்: சுங்கத்துறையில் நிபுணத்துவ உணர்வையும் திறன் பகிர்வு கலாசாரத்தையும் மேம்படுத்துதல் எனும் கருப்
பொருளுடன் இவ்வாண்டின் அனைத்துலகச் சுங்கத்துறை தினம் கொண்டாடப்பட்டது.

