ஊழல்: உணவு விநியோக ஊழியர்கள் இருவருக்கு அபராதம்

ஊழல்: உணவு விநியோக ஊழியர்கள் இருவருக்கு அபராதம்

1 mins read
64aa2d03-bf49-4f97-b12c-5873cfdb3d9f
-

உணவு விநி­யோக நிறு­வ­ன­மான சொன்­னா­மே­ரா­வின் சரக்­குக் கிடங்கு மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த மகேஸ்­வ­ரன் எம். ரத்­ன­ச­பா­பதி $6,800 லஞ்­சம்

வாங்­கி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்­தப் பணத்தை அவர் மனித­வ­ளச் சேவை­களை வழங்­கும் நிறு­வ­னத்­தின் இயக்­கு­ந­ரான 26 வயது ஹேம­சு­தன் நாயர் அச்­சு­த­நா­ய­ரி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­ட­தாக அர­சாங்க வழக்­

க­றி­ஞர்­கள் தெரி­வித்­த­னர்.

சொன்­னா­மேரா நிறு­வ­னத்­துக்­குத் தேவை­யான ஊழி­யர்­களை ஹேம­சு­த­னின் நிறு­வ­னத்­தி­ட­

மி­ருந்து பெற மகேஸ்­வ­ர­னுக்கு லஞ்­சம் கொடுக்­கப்­பட்­டது.

ஹேம­சு­த­னி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட லஞ்­சப் பணத்­தின் ஒரு பகு­தியை சக ஊழி­யர் ரெனிதா முர­ளி­த­ர­னி­டம் மகேஸ்­வ­ரன் தந்­தார். ரெனி­தா­வி­டம் அவர் $3,400 கொடுத்­தார்.

27 வயது மகேஸ்­வ­ரன்,

31 வயது ரெனிதா ஆகி­யோர் மீது தலா மூன்று ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவற்றை அவர்­கள் இரு­வ­ரும் நேற்று ஒப்­புக்­கொண்­ட­னர்.

இரு­வ­ருக்­கும் தலா $24,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

சொன்­னா­மேரா நிறு­வ­னத்­

தி­டம் மகேஸ்­வ­ரன் $2,600 திருப்­பிக் கொடுத்­து­விட்­டார். அவ­ருக்­குக் கூடு­த­லாக $829 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது. தாம் வேலை பார்த்த நிறு­வ­னத்­தி­டம் ரெனிதா பணத்­தைத் திருப்­பிக் கொடுக்­க­வில்லை. அவ­ருக்கு கூடு­த­லாக $3,379 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

ஹேம­சு­தன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தடுப்­புத் திட்­டம் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­தற்கு முன்பு மலே­சி­யா­வுக்­குச் சென்­ற­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் இன்­னும் பிடி­ப­ட­வில்லை என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் கூறி­னார்.