உடற்பயிற்சிக் கூடத்தில் தாக்கப்பட்ட சிறுவன்

உடற்பயிற்சிக் கூடத்தில் தாக்கப்பட்ட சிறுவன்

1 mins read
dca0760d-60aa-4d36-9ac5-2eb520350c0c
-

சிராங்­கூ­னில் உள்ள உடற்­ப­யிற்­சிக்­கூ­டத்­தில் தாக்­கப்­பட்ட 15 வயது சிறு­வன் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­டார்.

ஜன­வரி 15ஆம் தேதி, புளோக் 201 சிராங்­கூன் சென்ட்­ரல் அருகே இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக தெரி­வித்த காவல்­துறை, அன்­றைய தினம் மாலை 4.15 மணி­ய­ள­வில் உத­விக்­கான அழைப்பு தனக்கு வந்­த­தா­கக் கூறி­யது.

இந்த வழக்கு கல­வ­ரம் என வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதன் தொடர்­பில் 11 முதல் 14 வய­து­டைய எட்­டு பேர் காவல்­துறை விசா­ர­ணைக்கு உதவி வரு­கின்­ற­னர்.

கிட்­டத்­தட்ட ஒரு நிமி­டக் காணொ­ளி­யில் இந்­தச் சம்­ப­வம் பதி­வா­னது. அக்­கா­ணொளி இணை­யத்­தில் பர­வி­யது.

உடற்­ப­யிற்­சிக்­கூ­டத்­தில் உள்ள உடற்­ப­யிற்சி இயந்­தி­ரம் ஒன்­றில் அமர்ந்­தி­ருந்த அந்­தச் சிறு­வனை, பதின்ம வயது ஆடவர் ஒரு­வர் முகத்­தில் உதைத்­தார். அங்­கி­ருந்த மேலும் இரு பதின்ம வயது ஆட­வர்­கள் அச்­சி­று­வனை உதைத்­த­னர். தரை­யில் விழுந்து கிடந்த அச்­சி­று­வனை அந்த மூவ­ரும் சேர்ந்து அவ­ரு­டைய தலை­யி­லும் உட­லி­லும் அடித்து உதைத்­த­னர்.

காவல்­துறை அதி­கா­ரி­கள் வந்­தால் உட­ன­டி­யாக ஓடி­வி­டு­மாறு காணொ­ளி­யின் பின்­ன­ணி­யில் ஒரு­வர் கூறு­வ­தைக் கேட்க முடிந்­தது. அச்­சி­று

­வ­னைத் தாக்­கி­ய­வர்­கள், அவ­ரு­டைய சட்­டையை அகற்­று­வது பற்றி பின்­ன­ணி­யில் வேறொ­ரு­வர் ஏதோ பேசு­வ­தை­யும் கேட்க முடிந்­தது.

தம் கைக­ளால் தலையை மறைத்­துக்­கொள்ள முயன்ற அச்­சி­று­வன் அழு­வ­தைக் காணொ­ளி­யில் கேட்க முடிந்­தது. அச்­சி­று­வன் மருத்­து­வ­

ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­போது அவர் சுய­நி­னை­வு­டன் இருந்­தார். இச்­சம்­ப­வம் குறித்து காவல்­துறை விசா­ர­ணை­யில் ஈடு­பட்டு வரு­கிறது.