எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளருக்கு லஞ்சம் கொடுத்த இருவருக்குத் தலா $18,200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிகழ்ந்தபோது அல்லிங்டன் எஞ்சினியரிங் அண்ட் டிரேடிங் நிறுவனத்தின் உதவி விற்பனை மேலாளராக வென்டி லோ சென் யிவும் நிறுவனத்தின் இயக்குநராக சின் டிங் லெய்யும் பணிபுரிந்தனர்.
எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் மூத்த பொறியாளரான 46 வயது டான் ஹூன் கீக்கு $9,260 லஞ்சம் கொடுக்க இருவரும் இணங்கியதாக நீதி
மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது டானுக்கு பணப் பிரச்சினை இருந்ததாக அறியப்படுகிறது.
தங்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை 62 வயது லோவும் 70 வயது சின்னும் ஒப்புக்கொண்டனர்.
தங்கள் நிறுவனத்திட
மிருந்து வன்பொருளை எஸ்பிஎஸ் பெற்றுக்கொள்வதற்காக டானுக்கு இருவரும் லஞ்சம் கொடுத்தனர்.
டான் தற்போது எஸ்பிஎஸ் டிரான்சிட்டில் பணிபுரியவில்லை. அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.

