போலி ஆவணம் சமர்ப்பித்த பெண்ணுக்குச் சிறை

போலி ஆவணம் சமர்ப்பித்த பெண்ணுக்குச் சிறை

1 mins read
5eda206e-0604-45d3-a2ba-5071e1da6912
-

தெம்­ப­னிஸ் வட்­டா­ரத்­தில் உள்ள அல் அமின் பாலர் பள்­ளி­யின் தலை­மை­யா­சி­ரி­யர் பத­விக்­குப் போலி ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்து விண்­ணப்­பம் செய்த 43 வயது பெண்­ணுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

'ஜிசிஇ' சாதா­ர­ண­நிலை தேர்வை இரு­முறை எழு­தி­யும் ஆங்­கி­லத் தேர்­வில் ஏஞ்­சலா சோங் அன்சி தேர்ச்சி பெற­வில்லை. 2019ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 13ஆம் தேதி­யன்று இணை­யம் மூலம் பாலர் மேம்­பாட்டு முக­வைக்கு போலி ஆவ­ணங்­களை அவர் அனுப்பி வைத்­தார்.

அல் அமின் பாலர் பள்­ளி

­யி­டம் அவர் போலி 'ஜிசிஇ' சாதா­ர­ண­நிலை தேர்­வுச்

சான்­றி­த­ழைச் சமர்ப்­பித்­தார்.

சமர்ப்­பிக்­கப்­பட்ட ஆவ­ணங்­கள் உண்­மை­யா­ன­வை­தானா என்­பதை உறுதி செய்ய முகவை சோதனை நடத்­தி­ய­தில் சோங்­கின் நேர்­மை­யற்ற செயல் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

இது­கு­றித்து 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி­யன்று காவல்­து­றை­யி­டம் முக­வை­யின் மேலா­ளர் ஒரு­வர் புகார் செய்­தார்.

போலி ஆவ­ணங்­கள் சமர்ப்­பித்த குற்­றச்­சாட்­டு­களை சோங் ஒப்­புக்­கொண்­டார்.