சுவா சூ காங்கில் மாபெரும் சாஃப்ரா

சுவா சூ காங்கில் மாபெரும் சாஃப்ரா

2 mins read
3e830794-8396-4552-b801-ead10015c6dd
-

ஆ. விஷ்ணு வர்­தினி

சாஃப்ரா­வின் ஏழா­வது மன­ம­கிழ் மன்­றம் வரும் மே மாதத்­தில் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. இயற்­கைக்கு உகந்த விதத்­தில் அமைக்­கப்­பட இருக்­கும் இம்­மன்­றம், கூரை சேமிப்­புத் தொட்­டி­களில் மழை­நீரை சேமிக்­கும் வச­தி­யு­டைய முதல் சாஃப்ரா மன்­ற­மா­கும். ஆண்­டு­தோ­றும் இரண்டு ஒலிம்­பிக் போட்டி அள­வி­லான நீச்­சல் குளங்­களை நிரப்­பக்கூடிய அளவுக்கு நீர் சேமிக்­கப்­பட்டு நீர்ப்­பா­ச­னத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும். நேற்று நடந்­தே­றிய கட்­டு­மா­னத் தளச் சுற்­று­லா­வில் கலந்­து­கொண்ட வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், "கொவிட்-19ஆல் ஏற்­பட்ட தாம­தங்­க­ளைத் தாண்டி சாஃப்ரா­வின் கட்­டு­மானப் பணி­கள் விறு­வி­று­வென நடந்­து­கொண்­டி­ருக்­ கின்றன.

"குடும்­பங்­களும் சமூ­கத்­தா­ரும் ஒன்­று­கூடி நோய்ப்­ப­ர­வல் சூழ­லுக்­குப் பின்­னர் தங்­க­ளது பிணைப்பை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள இந்த மன­கிழ் மன்­றம் கைகொ­டுக்­கும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார்.

செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சாஃப்ரா­வின் தலை­வ­ரும் தற்­காப்பு மூத்த துணை அமைச்­ச­ரு­மான ஸாக்கி முக­மது, சுவா சூ காங் பூங்­கா­வு­டன் மன்­றம் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்ள விதத்தைச் சுட்­டி­னார்.

பூங்­கா­வின் அமை­தி­யை­யும் இயற்­கைச் சூழ­லை­யும் தக்­க­வைத்­துக் கொள்­ளும் வகை­யில் இக்­கட்­ட­டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இந்­நி­கழ்வை குறிக்­கும் வண்­ணம் அமைச்­சர் கான், மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி இரு­வ­ரும் லெப்­பர்ட் மரம் ஒன்­றும் நட்­ட­னர். சுவா சூ காங் பெரு­ வி­ரைவு ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து ஐந்து நிமிட தொலை­வில் உள்ள சுவா சூ காங் பூங்­கா­வில் கட்­டப்­பட்டு வரு­கிறது சாஃப்ரா­வின் இந்த ஐந்து மாடிக் கட்­ட­டம்.

தேசத்­தின் தற்­காப்­புக்கு பங்­காற்றி வரும் தேசிய சேவை­யா­ளர்­க­ளின் உழைப்பை அங்­கீ­க­ரிக்­கும் வண்­ணம் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த புதிய மன்­றம், சிங்­கப்­பூ­ரின் வட­மேற்கு பகு­தி­யில் வசிக்­கும் 90,000க்கும் மேற்­பட்ட தேசிய சேவை­யா­ளர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்­கும் எட்­டக்­கூ­டிய தூரத்தில் இருக்­கும். உணவு பானக் கடை­கள், பொழு­து­போக்கு நிலை­யங்­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் முத­லிய வச­தி­க­ளைக் கொண்ட சுவா சூ காங் சாஃப்ரா, ஆண்­டு­தோ­றும் 1.4 மில்­லி­யன் வரு­கை­யா­ளர்­களை ஈர்க்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. உள்­புற நீச்­சல் குள­மும் ஃபுட்சால் விளை­யாட்டு மைதா­ன­மும் உள்ள முதல் சாஃப்ரா­வாக இது விளங்­கும். மாண­வர்­க­ளுக்­கென 16 செறி­வூட்­டல் நிலை­யங்­களும் மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­ய­மும் இங்கு அமை­ய­வி­ருக்­கின்­றன.

ஆண்­டு­தோ­றும் 450,000 கிலோ­வாட் அள­வி­லான மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்ய வல்ல 660 சூரிய ஒளித் தக­டு­கள் மன்றத்தின் கூரை­யில் பொருத்­தப்­படும்.

அனைத்து சாஃப்ரா மன்றங் களைக் காட்­டி­லும் இதுவே ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யி­லான சூரிய ஒளித் தக­டு­கள். மின் சாரத்தைச் சேமிக்க இக்­கட்­ட­டம் கொண்­டுள்ள திட்­டங்­களில் இது­வும் ஒன்று. கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் 'கிரீன் மார்க் பிளேட்­டி­னம் சூப்­பர் லோ எனர்ஜி' தர­நி­லையை எட்­டும் சிங்­கப்­பூ­ரின் முதல் மன­ம­கிழ் மன்­ற­மாக விளங்­கும் குறிக்­கோள் கொண்­டுள்­ள­தா­க­வும் சாஃப்ரா தெரி­வித்­தது. 1972ஆம் ஆண்­டில் சாஃப்ரா மன­ம­கிழ் மன்­றம் தொடங்­கப்பட்­டது. ஜூரோங், மவுண்ட் ஃபேபர், பொங்­கோல், தெம்­பனிஸ், தோ பாயோ, ஈசூன் ஆகிய பகு­தி­களில் தற்­போது ஆறு சாஃப்ரா மன­ம­கிழ் மன்­றங்­கள் இயங்கி வரு­கின்­றன.