துணைப்பாட நிலையத்தின் முன்னாள் முதல்வர் காணாமல் தலைமறைவாகிவிட்டார்.
அவரைக் கைது செய்ய அனைத்துலக காவல்துறை உத்தரவிட்டுள்ள நிலையில் அவரைத் தேடி கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது.
போ யூவான் நீ, 57, 'ஓ' நிலைத் தேர்வில் மோசடி செய்ய மாணவர்களுக்கு உதவியதால் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. சென்ற செப்டம்பர் 2022ல் ஓவன் ஃபூ அல்லது போனி என்றும் அழைக்கப்படும் போவிடம் சிறைத் தண்டனையை நிறைவேற்ற சரண் அடையுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று வரை அவர் முன்னிலை யாகவில்லை. "கைது ஆணையும் அனைத் துலக காவல்துறையின் சிவப்பு எச்சரிக்கையும் அவருக்கு எதி ராக பிறப்பிக்கப்பட்டுள்ளன," என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் காவல்துறையினர் தெரிவித்தனர். "போவைப் பற்றி தகவல் அறிந்தால் 1800-255-0000 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசிய மாக வைத்திருக்கப்படும்," என்றும் காவல்துறை கூறியது.
போ, சிங்கப்பூரிலிருந்து தப்பி வெளியேறியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

