வீட்டில் குடித்த தந்தையை சுத்தியலால் அடித்த மகள்

வீட்டில் குடித்த தந்தையை சுத்தியலால் அடித்த மகள்

2 mins read
42c765fc-251e-4b0d-9143-d23774ee53bb
-

மதுபானம் குடித்தால் வீட்டை அசிங்கமாக்கி விடுவார் என்பதால் வீட்டில் மதுபானம் அருந்தக்கூடாது என்று தனது 53 வயது தந்தையிடம் மகள் ஷிவதர்ஷினி கருணாநிதி கூறி யிருந்தார். ஆனால் ஒரு நாள் காலை அவர் எழுந்தபோது வரவேற்பு அறை முழுவதும் மதுபானக் கேன்கள் சிதறிக் கிடந்தன. இரவெல்லாம் தந்தை மதுபானம் குடித்திருந்ததால் ஆத்திரமடைந்த ஷிவதர்ஷினி அவரது தலையை சுத்தியலால் பலமுறைத் தாக்கினார்.

நேற்று நீதிமன்றத்தில் தந்தையைத் தாக்கிய குற்றத்தை 28 வயது ஷிவதர்ஷினி ஒப்புக் கொண்டார்.

மாவட்ட நீதிபதி இயூஜின் டியோ, கட்டாய மனநல சிசிச்சைக்கு அவர் ஏற்றவரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தர விட்டார்.

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் படித்த ஷிவதர்ஷினி வேலை தேடிக் கொண்டிருந்தார். வீட்டில் தாய், தந்தை, இளைய சகோதரியுடன் அவர் வசித்து வந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2020 ஜன­வரி 6ஆம் தேதி சம்­ப­வத்­தின்­போது சமை­யல் அறை­யி­லி­ருந்து 34 செ.மீட்­டர் நீள­முள்ள சுத்­தி­யலை எடுத்து வந்த ஷிவ­தர்­ஷினி, குடித்­து­விட்டு தூங்­கிக் கொண்­டி­ருந்த தந்­தை­யின் தலை மீது இரண்டு முதல் நான்கு முறை ஓங்கி அடித்­தார். அப்­போது தாயார் வீட்­டில் இல்லை. இளைய சகோ­தரி உறங்­கிக் கொண்­டி­ருந்­தார்.

வலி­யில் எழுந்த அவ­ரது தந்­தை­யின் தலையிலிருந்து ரத்­தம் வழிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஷிவ­தர்­ஷினி காவல்­து­றைக்கு தக­வல் தெரி­வித்­தார். இதை­ய­டுத்து அவர் கைது செய்­யப்­பட்­டார். மண்­டை­யோடு உடைந்த அவ­ரது தந்­தைக்கு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. நான்கு நாள்­க­ளுக்­குப் பிறகு அவர் வீடு திரும்­பி­னார். இந்த வழக்கு மீண்­டும் ஏப்­ரல் 5ஆம் தேதி விசா­ர­ணைக்கு வரு­கிறது.