சிறார்களிடம் பாலியல் செயல் களில் ஈடுபடுவதை ஆர்வமாகக் கொண்ட முதியவர் ஒருவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
கேரி அலெக்சாண்டர் டான், 68, ஏற்கெனவே பல சிறார்களி டம் பாலியல் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
'ஃபீடோஃபிலிக்' பள்ளிப் பேருந்து ஓட்டுநர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
சிறார்களிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவதால் 'பீடோபெஃலிக்' என்று குறிப்பிடப்படும் மனநோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது அரசுத் தரப்பு வழக்கறிஞர் சோங் கீ என், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடவில்லை.
ஆனால் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன், சிறுமி உட்பட பலரிடம் டான் பாலியல் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்படவிருந்த நிலையில் வழக்கு மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
டானுக்குத் திருமணமாகி மூன்று வளர்ந்த பிள்ளைகள் இருக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன் மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.
அவற்றில் மானபங்க குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
இந்த நிலையில் அவர் மீது மேலும் ஒரு குற்றச் சாட்டு கொண்டு வரப்பட்டு உள்ளது.


