68 வயது முதியவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

68 வயது முதியவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

1 mins read
77557af7-4b77-4d1f-8896-f80a96dfca1b
-

சிறார்­க­ளி­டம் பாலி­யல் செயல் களில் ஈடு­ப­டு­வதை ஆர்­வ­மா­கக் கொண்ட முதி­ய­வர் ஒரு­வர் மீது மேலும் ஒரு குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டுள்­ளது.

கேரி அலெக்­சாண்­டர் டான், 68, ஏற்­கெ­னவே பல சிறார்­களி டம் பாலி­யல் செயல்­களில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டு­களை எதிர்­நோக்­கு­கி­றார்.

'ஃபீடோஃபிலிக்' பள்­ளிப் பேருந்து ஓட்­டு­நர் என்று அவர் அழைக்­கப்­பட்­டார்.

சிறார்­க­ளி­டம் பாலி­யல் செயல்­களில் ஈடு­ப­டு­வ­தால் 'பீடோ­பெ­ஃ­லிக்' என்று குறிப்­பி­டப்­படும் மன­நோ­யால் அவர் பாதிக்­கப்­பட்­டி­ருந்ததாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று நீதி­மன்­றத்­தில் வழக்கு விசா­ரணை நடை­பெற்ற போது அரசுத் தரப்பு வழக்­க­றி­ஞர் சோங் கீ என், பாதிக்­கப்­பட்­ட­வர்களின் விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை.

ஆனால் மூளை வளர்ச்சி குன்­றிய சிறு­வன், சிறுமி உட்­பட பல­ரி­டம் டான் பாலி­யல் செயல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்.

அவ­ருக்கு நேற்று தண்­டனை விதிக்­கப்­ப­ட­வி­ருந்த நிலை­யில் வழக்கு மார்ச் 1ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

டானுக்­குத் திரு­ம­ண­மாகி மூன்று வளர்ந்த பிள்­ளை­கள் இருக்­கின்­ற­னர்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் தன் மீது சுமத்­தப்­பட்ட ஆறு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக்கொண்­டார்.

அவற்­றில் மான­பங்­க குற்­றச்­சாட்­டு­களும் அடங்­கும்.

இந்த நிலை­யில் அவர் மீது மேலும் ஒரு குற்­றச் ­சாட்டு கொண்டு வரப்­பட்­டு உள்­ளது.