'பிடிஓ' வீடுகளுக்கு காத்திருப்பு காலம் பற்றி வீவக விளக்கம்

'பிடிஓ' வீடுகளுக்கு காத்திருப்பு காலம் பற்றி வீவக விளக்கம்

3 mins read
dc8b3bca-15e9-4763-81c1-29992ef419e1
-

'பிடிஓ' வீடு­க­ளுக்­கான காத்திருப்புக் காலம் அவற்றின் அமை­வி­டத்­தை­யும் கட்­டு­மா­னத் திட்­டத்­தை­யும் அவற்றின் இதர நில­வ­ரங்­க­ளை­யும் பொறுத்து இருக்­கும் என்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் விளக்­கி­யது.

கொவிட்-19 கிருமி தலை­விரித்­தா­டியபோது பிடிஓ வீட்டுக்­கான காத்­தி­ருப்புக் காலம் நான்கு முதல் ஐந்­தாண்­டு­கள் வரைப்­பட்­ட­தாக இருந்­தது.

இப்­போது கட்­டப்­பட்டு வரும் 94 பிடிஓ வீட்­டுத் திட்­டங்­களில் இடம்­பெ­றும் வீடு­களை வாங்­கு­வோர் இரண்­டாண்­டு­க­ளுக்­கும் 5.9 ஆண்­டு­க­ளுக்­கும் இடை­யில் அதா­வது சரா­ச­ரி­யாக சுமார் 4.3 ஆண்­டு­கள் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கிறது.

அதிக கட்­ட­டங்­கள் நிறைந்­தி­ருக்­கின்ற, எம்­ஆர்டி சுரங்க நிலை­யங்­கள் போன்ற உள்­கட்­டமைப்பு வச­தி­கள் இருக்­கின்ற இடங்­களில் கட்­டப்­படும் பிடிஓ வீடு­க­ளைப் பொறுத்­த­வ­ரை­ ஆயத்­தப் பணி­களை மேற்­கொள்ள அதிக கால­அ­வ­கா­சம் தேவைப்படும்.

20 முதல் 50 மாடி வரைப்­பட்ட உய­ரத்­தைக் கொண்டுள்ள, கூடு­த­லாக வடி­வ­மைப்பு வசதி­களு­டன்­கூ­டிய சிக்­க­லான கட்டுமான திட்­டங்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­, வீடு­க­ளைக் கட்ட அதிக காலம் பிடிக்­கும்.

அதே­போல, அங்­காடி நிலை­யம் அல்­லது பேருந்து முனை­யம் போன்ற இதர கட்­ட­டங்­க­ளு­டன் சேர்த்து கட்­டப்­படும் வீடு­க­ளைப் பொறுத்­த­வரை திட்­ட­மி­ட­வும் வடி­வ­மைக்­க­வும் கட்­டு­மா­னப் பணி­களை மேற்­கொள்­ள­வும் அதிக கால­அ­வ­கா­சம் தேவை என்று கழ­கம் குறிப்­பிட்­டது.

வரும் ஆண்டு­களில் மேலும் சிக்­க­லான பிடிஓ கட்­டு­மான திட்­டங்­கள் நடப்­புக்கு வரும் என்று கழ­கம் எதிர்­பார்க்­கிறது.

மவுண்ட் பிள­சன்ட் பகு­தி­யில் பழைய காவல்­துறை பயி­லக இடத்­தில் சுமார் 5,000 பிடிஓ வீடு­கள் கட்­டப்­படும். 'கிரேட்டர் சதர்ன் வாட்­டர்­ஃபி­ரண்ட்' பகுதி­யில் உள்ள கெப்­பல் கிளப் இடத்­தில் 6,000 பிடிஓ வீடு­கள் கட்­டப்­பட இருக்­கின்­றன.

புதிய வீட்­டுத் திட்­டங்­களை தீட்டி, கட்­டு­வ­தற்குப் பல ஆண்டு­கா­லம் பிடிக்­கும். திட்­ட­மி­டு­வது, வடி­வ­மைப்­பது, கட்­டு­மா­னப் பணி­களை நிறை­வேற்­று­வது முத­லான பல கட்­டங்­கள் அவற்­றில் இருக்­கின்­றன.

சுற்­றுச்­சூ­ழல் அல்­லது பாரம்­பரிய அம்­சங்­க­ளு­டன் கூடிய இடங்­க­ளைப் பொறுத்­த­வரை தன்­னு­டைய மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளுக்கு முன்­ன­தாக கழ­கம் பல ஆய்­வு­களை நடத்­தும்.

ஒரு பிடிஓ திட்­டத்தை வடி­வ­மைக்க ஒன்று முதல் ஒன்­றரை ஆண்­டு­கள் பிடிக்­கும். இதற்கு கழ­கம் பல்­வேறு அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து செயல்­படும்.

இட கட்­டு­மான எல்லை, மொத்த பிளாட் விகி­தம் போன்ற பல­வற்­றுக்­கும் நகர மறு­சீ­ர­மைப்பு ஆணையம் அனு­மதி தர­வேண்­டும்.

பிறகு இரண்­டாண்டு காலம் நில ஆயத்­தப் பணி­கள் நடக்­கும். கட்­டு­மான குத்­தகை வழங்­கப்­படும். பிற­கு­தான் கட்டு­மானப் பணி­கள் தொடங்­கும்.

காலாங்/வாம்­போ­வில் 'கெம்­பாஸ் ரெசி­டன்­சஸ்' என்ற பிடிஓ கட்­டு­மா­னத் திட்­டம் மிக­வும் சிக்­க­லா­னது. இந்த வீடு­கள் இப்­போது கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

2019ல் இத்­திட்­டம் தொடங்­கி­யது. நான்கு ஆண்­டு­கள் எட்டு மாதங்­களில் வீடு­கள் கட்டி முடிக்­கப்­படும் என்று திட்­ட­மிடப்­பட்­டது. ஆனால் கொவிட்-19 கார­ண­மாக திட்­டம் தாம­தம் அடைந்து 2024 முடி­வில் அல்­லது 2025 தொடக்­கத்­தில்­தான் பூர்த்­தி­யா­கும்.

கெம்­பாஸ் ரெசி­டன்­சஸ் திட்­டத்­தில் 29 முதல் 37 மாடி­க­ளைக் கொண்ட நான்கு புளோக்­கு­கள் இருக்­கும். அந்­தத் திட்­டம் பூன் கெங் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கு அருகே இடம்­பெ­று­கிறது. காலாங் பல­துறை மருந்­த­கம், குவாங் வாய் ஷு மருத்­து­வ­மனை போன்ற பல கட்­ட­டங்­களும் அருகே இருக்­கின்­றன.

அந்­தத் திட்ட கட்­டு­மானப் பணி­க­ளுக்­கான ஆயத்த வேலை­களை மேற்­கொள்ள மூன்று முதல் ஐந்து மாத காலம் பிடித்­தது. வீவக புளோக்கு­களுக்கு அஸ்­தி­வா­ரத்­தைப் அமைக்க ஒன்­பது மாதங்­கள் ஆனது. வீவக புளோக்­கு­க­ளை­யும் குடி­யி­ருப்பு வீடு­க­ளை­யும் கட்ட 34.5 மாதங்­கள் பிடிக்­கும்.

இந்­தப் பணி­கள் முடிந்­த­தும் வீடு­களில் சன்­னல்­கள், கத­வு­கள், கழி­வறைச் சாத­னங்­கள், சுவர், தரைக்­கற்­கள் பதித்­தல் முத­லான பணி­கள் நடக்­கும். பிறகு அதி­கா­ரி­கள் வீடு­க­ளைப் பரி­சோ­த­னை­யிட்டு உரி­மை­யா­ள­ரி­டம் சாவியை ஒப்­ப­டைப்­பார். இதற்கு மூன்று மாத காலமாகும்.