இலவச கல்விச் செறிவாக்கத் திட்டம் அமல்: ஜூரோங் வெஸ்ட் மாணவருக்கு உதவும்

2 mins read
540971fe-ba30-4885-8904-6c871a4dd88a
-

ஜூரோங் வெஸ்­டில் வாடகை வீடுகளில் வசிக்­கின்ற, பள்­ளிக்­கூட மாண­வர்­கள் சுமார் 50 முதல் 60 பேர் இல­வ­ச­மாக கல்­விச் செறிவாக்­கச் செயல்திட்­டங் களில் சேர்ந்து பலனடை­ய­லாம்.

மலை ஏறு­தல், கலை, கை வினை போன்ற தேர்ச்­சி­களை அவர்­கள் கற்­றுக்­கொள்­ள­லாம்.

இதற்கு வகை செய்­யும் யுஓஎல்-பிபி­எச்ஜி சமூக முன்­னேற்­றச் செயல்­திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

இந்த முயற்சி, சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­டன் சேர்ந்து இடம்­பெ­று­கிறது.

யுஓ­எல் குருப் என்­பது சொத்து, விருந்­தோம்­பல் துறை நிறு­வ­னம். பான்­ ப­சி­பிக் ஹோட்­டல்ஸ் குருப் (பிபி­எச்ஜி) அத­னு­டைய ஹோட்­டல்­துறை துணை நிறு­வ­னம் ஆகும்.

இவை இரண்­டும் சேர்ந்து, தேவை உள்ள மாண­வர்­க­ளுக்கு ஏற்ற வகை­யில் இந்­தக் கல்­விச் செறி­வாக்­கச் செயல்­திட்­டத்தை நடை­மு­றைப்­படுத்­து­கின்­றன.

வாடகை வீடு­களில் வசிக்கும் குடும்­பங்­களும் மாண­வர்­களும் சுய­சார்­பு­டன் திக­ழ­வேண்­டும்; சமூ­கத்­தில் அவர்­க­ளின் நிலை உயர வேண்­டும்.

இதற்­காக சமு­தாய குடும்ப மேம்­பாட்டு அமைச்சு 'சமூக இணைப்பு' என்ற முயற்­சியைத் தொடங்கி இருக்­கிறது.

நேற்று தொடங்­கப்­பட்ட புதிய செயல்­திட்­டம் இதன் ஒரு பகு­தி­யாக இடம்­பெ­று­கிறது.

பல­வகை நாட்­டங்­க­ளு­டன், அனு­ப­வங்­க­ளு­டன் நாலும் அறிந்­த­வர்­க­ளாக மாண­வர்­கள் உரு­வாக வேண்­டும்.

வகுப்­பறைக்கு வெளியே பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு அவர்­க­ளுக்­குக் கிடைக்க வேண்­டும். இதைக் கருத்­தில்கொண்டு அடுத்த மூன்று ஆண்­டு­களில் மேலும் பல கல்­விச் செறிவாக்க நட­வடிக்­கை­கள் இடம்­பெ­றும் என்று யுஓ­எல் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

அந்தக் காலகட்டத்தில் 200 மாண­வர்­களை எட்­ட­லாம் என்­பது அதன் இலக்­கு.

பல்­வேறு கடைத்­தொ­கு­தி­களிலும் ஹோட்­டல்­க­ளி­லும் கல்­விச் செறி­வாக்க நட­வ­டிக்கை­களுக்கு ஏற்­பாடு செய்­ய­லாம் என்று நம்­பும் யுஓ­எல்-பிபி­எச்ஜி நிறு­வ­னங்­கள் இச்­செ­யல்­திட்டத்­தில் சேர்ந்து உத­வும்­படி அவற்றின் முத­லாளிகளுக்கு அழைப்பு விடுத்­து உள்­ளது.