உயிர்க்கொல்லி குப்பை சம்பவங்கள் கூடின: தலைவர்கள் கண்டிப்பு; புதிய சட்டத்திற்கு ஆதரவு

உயிர்க்கொல்லி குப்பை சம்பவங்கள் கூடின: தலைவர்கள் கண்டிப்பு; புதிய சட்டத்திற்கு ஆதரவு

2 mins read
ba76ab17-1087-42af-98f7-a3f0cfc1e20e
-

சிங்­கப்­பூ­ரில் கடந்த நான்கு ஆண்டு­க­ளாக உயிர்க்­கொல்லி குப்பை போடும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இத்தகைய பொறுப்­பற்ற செயலை பொதுச் சுகா­தார மன்­ற­மும் அடித்­த­ளத் தலை­வர்­களும் கண்­டித்­துள்ளனர்.

மக்­க­ளின் பாது­காப்பைக் கருதி மூன்று தொகு­தி­களில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் இப்­பி­ரச்­சினைப் பற்றிப் பேசப்­பட்­டது.

தெம்­ப­னிஸ் நார்த், மவுண்ட்­பேட்­டன், கொலம் ஆயர் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் ஜன­வரி 11, 13, 17ஆம் தேதி­களில் பொதுச் சுகா­தார மன்­றம், அடித்­தள உறுப்­பினர்­கள் இப்­பி­ரச்­சி­னை­யைப் பற்றி கலந்­து­ரை­யா­டி­னர்.

அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட புதிய சட்­டத்தை தகுந்த நட­வ­டிக்­கை­யாக குடியிருப்­பா­ளர்­கள் பலர் கரு­து­கின்­ற­னர்.

சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு தட்­டு­க­ளைத் திரும்ப வைத்­தல், முறை­யாகக் குப்­பை­களை அகற்­று­தல், கழி­வ­றை­யைச் சுத்­த­மாக வைத்­துக்­கொள்­ளு­தல் ஆகிய மூன்று முக்­கிய கூறு­களை வலியு­றுத்­தும் வகை­யில் எட்டு வகை ஆங் பாவ் ரொக்­கப் பொட்­ட­லங்­கள் வடி­வ­மைக்­கப்­பட்­டன.

"கொவிட்-19 பெருந்­தொற்­றின்­போது அனை­வ­ரும் வீட்­டில் முடங்கி கிடந்­த­தால் கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக உயிர்க்­கொல்லி குப்பை சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது.

"அதில் சுமார் 15% குற்­ற­வாளி­கள் இன்றும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை," என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் திரு­மதி கிரேஸ் ஃபூ அண்­மை­யில் நாடாளு­மன்றத்­தில் கூறினார்.

"இச்­செ­யலை பொதுச் சுகா­தார மன்­றம் கடு­மை­யாக கண்­டிக்­கிறது. உயிர்க்­கொல்லி குப்பை போடும் வீட்­டின் உரி­மை­யாளர் மீது குற்­றம் சுமத்­தப்­படும் என்று கூறும் புதிய சட்­டத்தை நாங்­கள் ஆத­ரிக்­கி­றோம்.

"நாம் பொறுப்­புள்ள சமுதா­ய­மாக திகழ்­வோம் என நம்புகிறேன்," என்று பொதுச் சுகா­தார மன்­றத்­தின் தலை­வர் எட்­வர்ட் டி சில்வா கூறி­னார்.