ரத்த நிணநீர் இல்லாத செயற்கை இறைச்சி தயாரிக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அங்கீகாரம்

ரத்த நிணநீர் இல்லாத செயற்கை இறைச்சி தயாரிக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அங்கீகாரம்

2 mins read
6bfa89f1-7153-42a4-b100-06bf3e8fe5f6
-

கலி­போர்­னி­யா­வைச் சேர்ந்த 'ஈட் ஜஸ்ட்' என்ற புதிய நிறு­வ­னம், சிங்­கப்­பூர் உணவு முக­வை­யின் அங்­கீ­கா­ரத்­தைப் பெற்றுள்ளது.

இதை­ய­டுத்து, அந்த நிறு­வ­னம் ரத்த நிண­நீர் (சீரம்) இல்­லாத இறைச்­சியை உற்­பத்தி செய்­யும்.

அந்த நிறு­வ­னத்­தின் ஆய்­வுக்­கூ­டம் மூலம் உற்­பத்தி செய்­யப்­படும் கோழி இறைச்சி விலை மலி­வாக இருக்­கும். தாக்­குப்­பிடிக்­கக் கூடி­ய­தா­க­வும் இருக்­கும்.

விலங்கு ரத்த நிண­நீ­ரைப் பயன்­ப­டுத்தி செயற்கை பொரித்த கோழியை (நகட்) தயா­ரிக்க 2020ல் அந்த நிறு­வ­னம் ஒழுங்­கு­முறை அங்­கீ­கா­ரத்தை சிங்­கப்­பூர் உணவு முக­வை­யி­டம் இருந்து பெற்று இருந்­தது.

செயற்கை இறைச்­சி­யைத் தயா­ரிக்க விலங்கு ரத்த நிண­நீர் தேவைப்­ப­டு­கிறது. இதை உரு­வாக்க அறி­வி­யல் அறி­ஞர்­கள் கரு­வுற்­றி­ருக்­கும் பசு­மா­டு­களை அறுத்து அவற்­றின் கருக்­களில் இருந்து ரத்­தத்தை எடுக்க வேண்டி இருந்­தது.

இப்­படி பெறப்­படும் ரத்த நிண­நீர் ஒரு லிட்­டர் கிட்­டத்­தட்ட US$2,000 (S$2,620) விலைக்கு விற்­கப்­ப­டு­கிறது என்று நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உணவு, அறி­வி­யல் தொழில்­நுட்ப செயல்­திட்ட இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் வில்­லி­யம் சென் கூறி­னார்.

இத­னால் செயற்கை இறைச்சி தயா­ரிப்பு செலவு கூடும். இதன் கார­ண­மாக விலங்கு ரத்த நிண­நீர் இல்­லா­மல் செயற்கை இறைச்­சியை உற்­பத்தி செய்ய நிறு­வ­னங்­கள் பல­வும் முயன்று வரு­கின்­றன.

சிங்­கப்­பூர் உணவு முகவை அங்­கீ­கா­ரம் வழங்கி இருப்பதை அடுத்து ஈட் ஜஸ்ட் நிறு­வ­னம், தன் உற்­பத்தி ஆலை­யில் ரத்த நிண­நீர் இல்­லாத செயற்கை இறைச்­சியை உற்­பத்தி செய்யும்.

அந்த ஆலை ஆயி­ரக்­கணக்­கான பவுண்ட் எடை­யுள்ள இறைச்­சி­யைத் தயா­ரிக்­கும் ஆற்­ற­லு­டன் இருக்­கும் என்று ஈட் ஜஸ்ட் நிறு­வ­னத்­தின் இணை நிறு­வ­ன­ரும் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான ஜோஷ் டெட்­ரிக் ஜன­வரி 18ஆம் தேதி அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தார்.

அந்த உற்­பத்தி ஆலை இந்த ஆண்­டில் திறக்­கப்­படும்.