1983 கம்பி வண்டி விபத்து: இன்னமும் கண் முன்னே

1983 கம்பி வண்டி விபத்து: இன்னமும் கண் முன்னே

2 mins read
7dd3b7c4-5180-4627-901a-70b2a658751b
-
multi-img1 of 2

சிங்­கப்­பூ­ரில் நாற்­பது ஆண்டு களுக்கு முன் செந்­தோ­சா­வுக்குச் சென்று வர இரண்டு வழி­கள்­தான் இருந்­தன. ஒன்று படகு, மற்­றொன்று கம்பி வண்டி. கம்பி வண்டி, மவுண்ட் ஃபேபரில் இருந்து புறப்­பட்டு செந்­தோ­சா­வில் இருக்­கும் கார்ல்­டன் ஹில் நிலையத்­திற்­குச் செல்­லும். அங்­கி­ருந்து இங்கு வரும்.

கடந்த 1983ஆம் ஆண்டு ஜன­வரி 29ஆம் தேதி செந்­தோ­சா­வுக்­கும் பிர­தான தீவுக்­கும் இடை­யில் 15 வண்­டி­கள் கம்­பி­யில் தொங்­கி­ய­படி சென்று வந்து ­கொண்டு இருந்­தன. எண் 26 என்ற வண்­டி­யில் ஜக்­ஜித் சிங் என்ற 8 வயது சிறு­வன், தன் குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆறு பேரு­டன் மவுண்ட் ஃபேபருக்­குத் திரும்­பிக்கொண்டு இருந்­தான். அப்­போது மாலை மணி 6 இருக்­கும்.

பனா­மா­வில் பதி­யப்­பட்ட 'இன்­வி­டோக்' என்ற எண்­ணெய்த் துரப்­ப­ணக் கப்­பல், அந்த நேரத்­தில் துறை­மு­கத்­தில் இருந்து ஆழ்கட­லுக்­குச் சென்றது. வழி­யில் கப்­ப­லின் கோபுரப் பகுதி, கம்பி வண்­டி­யின் கம்பி வடத்தை அறுத்­து­விட்­டது.

இரண்டு வண்­டி­கள் 55 மீட்­டர் கீழே கட­லில் விழுந்து­விட்­டன. ஒரு வண்­டி­யில் யாரும் இல்லை. இரண்­டா­வது வண்டியில் இருந்த ஐவ­ரும் மாண்­டனர்.

சிறு­வன் ஜக்­ஜித் சிங் இருந்த வண்டி குலுங்­கி­யது. அவ­ரின் மூன்று குடும்ப உறுப்­பி­னர்­கள் கட­லில் விழுந்­த­னர். சிறு­வ­னின் வளர்ப்­புத் தந்­தை­யான மகிந்­தர் சிங், 42, பாட்­டி­யான பிரித்­தம் கோர், 60, இரு­வ­ரும் மாண்­ட­னர். அவர்­க­ளு­டன் கடலில் விழுந்த இரண்டு வயது குழந்தை மீட்­கப்­பட்­டது.

ஜக்­ஜித் சிங்கிற்கு இப்­போது வயது 48. கட­லில் விழுந்து மீட்­கப்­பட்டு உயிர் பிழைத்த குழந்தை தஸ்­விந்­தர் சிங்­கிற்கு இப்­போது வயது 42.

திரு ஜக்­ஜித் சிங், அந்­தச் சம்­ப­வம் இன்­ன­மும் அப்­ப­டியே தன் கண்முன்னே தெரிவ தாகக் கூறி­னார்.

பயம், பதற்­றம் மனச்சோர்வு பாதிப்பு இன்­ன­மும் இவ­ரைப் பிடித்து ஆட்­டு­கிறது. அதை மறக்க பொழு­து­போக்கு நிகழ்ச்சி படைப்­பா­ள­ராக இவர் செயல்­ப­டு­கி­றார்.