மலேசிய பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட 60,000 பேர் ரசித்த ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

2 mins read
6be989b8-9f62-4c68-8d73-ee7830ff0118
-

இசைப்­பு­யல் ஏ.ஆர்.ரஹ்­மா­னின் இசை நிகழ்ச்சி கோலா­லம்­பூ­ரில் உள்ள புக்­கிட் ஜலில் அரங்­கில் நேற்று நடந்­தது. நிகழ்ச்­சி­யைக் காண கிட்­டத்­தட்ட 60,000 ரசி­கர்­கள் கூடி­னர்.

மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம், தக­வல், மின்­னி­லக்­கத் துறை அமைச்­சர் ஃபாமி ஃபட்­சில் ஆகி­யோ­ரும் தங்­கள் துணை­வி­யார்­க­ளு­டன் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

நிகழ்ச்சி தொடங்­கு­வ­தற்கு முன், ஏற்­பாட்­டுக் குழு கூட்ட நெரி­சலை முறை­யாக கட்­டுப்­படுத்­த­வில்லை என்­றும் அதிக விலை கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்­கி­ய­வர்­க­ளுக்குப் போதிய இருக்­கை­கள் இல்லை என்­றும் ரசி­கர்­கள் சமூ­கவலைத்தளங்­களில் பதிவு செய்­தி­ருந்­த­னர்.

நில­வ­ரம் மோச­ம­டை­வ­தற்கு முன், இசை நிகழ்ச்சி தொடங்­கி­யது. பாடல்­கள் தொடங்­கி­ய­உடனே, ரசி­கர்­கள் தங்­களைச் சுற்றி நடப்­பதை மறந்­து­விட்டு இசை மழை­யில் நனை­யத் தொடங்­கினர்.

'சிவாஜி தி பாஸ்', 'சிலம்­டாக் மில்­லி­ய­னர்' போன்ற படங்­களில் இடம்­பெற்ற பாடல்­களை ஏ.ஆர்.ரஹ்­மா­னும் மற்ற பாட­கர்­களும் பாடி ரசி­கர்­களை மகிழ்­வித்­த­னர்.

இந்­தி­யப் பின்­ன­ணிப் பாட­கர்­க­ளான ஹரி­ஹ­ரன், ஹரிச்­ச­ரண், ஸ்வேதா மோகன் போன்ற பாட­கர்­க­ளு­டன் மலே­சி­யப் பாட­கர் சித்தி நூர்­ஹ­லி­சா­வும் 'முன்பே வா' என்ற தமிழ்ப் பாட­லைப் பாடி ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தி­னார்.

நிகழ்ச்­சி­யைக் காண சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து பலர் மலே­சி­யா­வுக்­குச் சென்­றி­ருந்­த­னர். அவர்­களில் ஒரு­வர் ஏ.ஆர்.ரஹ்­மா­னின் தீவிர ரசி­கை என்று தன்­னைக் கூறிக்­கொள்­ளும் கங்­கேஸ்­வரி அன்­ப­ழ­கன், 32. தமது கண­வர், நண்­பர்­கள் இரு­வர் ஆகி­யோ­ரு­டன் அவர் கோலா­லம்­பூ­ருக்கு வெள்­ளிக்­கி­ழமை இரவு சென்­றி­ருந்­தார்.

மற்ற இசை நிகழ்ச்­சி­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்­மாண்­ட­மாக இருந்­த­தாக அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார். ஒவ்­வொரு பாட­லுக்­கும் ரசி­கர்­கள் ஆடிப் பாடி மகிழ்ந்­த­தாக அவர் சொன்­னார்.

குறிப்­பாக சித்தி நூர்­ஹ­லிசா 'முன்பே வா' பாடலை பாடி­யது அனை­வ­ரை­யும் மெய்­சி­லிர்க்க வைத்­த­தாக கங்­கேஸ்­வரி குறிப்­பிட்­டார்.