கொள்கை உணர்­வால் வாழ்க்கை மேம்­படும்

கொள்கை உணர்­வால் வாழ்க்கை மேம்­படும்

2 mins read
a49bcc16-5390-4eff-b18b-a0535ec04ad0
-

வானொலி தொகுப்­பா­ளர், நடிகை, பெண்­ணி­ய­வாதி, விமர்­ச­னச் சிந்­த­னை­யா­ளர் எனப் பல பரி­மா­ணங்­களில் தனது முத்­தி­ரை­யைப் பதித்­துள்­ளார் திரு­மதி ஜெய­சுதா சமுத்­தி­ரன். இவர் தற்­போது, 'வில்­லி­யம் கிரேண்ட் அண்ட் சன்ஸ்' நிறு­வ­னத்­தின் அனைத்­து­லக வர்த்­த­கக்­குறி மேலா­ள­ராக பணி­பு­ரி­கி­றார். இவர் ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் தன்­னு­டைய கல்­வியை முடித்து, சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டம் பெற்­றார்.

இவ­ரது திரு­ம­ணம் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக இருந்த கால­கட்­டத்­தில் நடை­பெற்­றது. திரு­ம­ணத்­திற்கு மிகச் சிலர் மட்­டுமே அழைக்­கப்­பட்­ட­தால் திரு­மதி ஜெய­சு­தா­வும் அவ­ரு­டைய கண­வ­ரும் திரு­ம­ணம் முடிந்து அடுத்த 12 மணி நேரத்­தில் 21 உற­வி­னர்­க­ளின் வீட்­டிற்­குச் சென்று ஆசி பெற்­றார்­கள். இதைத் தம் வாழ்­வில் மறக்க முடி­யாத ஒரு சம்­ப­வ­மாக திரு­மதி ஜெய­சுதா குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ்­வாறு தன் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான ஆண்­டு­கள் எவை என்று கேட்­கப்­பட்­ட­போது தனக்கு மிக­வும் பிடித்­த­மான கால­கட்­ட­மான ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் படித்த நாட்­களே என்று பதி­ல­ளித்­தார் இவர். ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி வலி­யு­றுத்­தும் விழு­மி­யங்­கள் நிச்­ச­யம் வாழ்க்­கைக்­குப் பய­னுள்­ள­வை­யாக உள்­ள­தென இவர் குறிப்­பி­டு­கி­றார். மக்­கள் நல­னுக்­காக செயல்­படுவது குறித்து பள்ளி வாழ்க்­கை­யின்­போது கற்­றுக்­கொண்ட இவர், சமூ­கத்­திற்கு மேலும் சிறந்த சேவையை இன்று ஆற்ற முடி­கிறது என்­கி­றார்.

கொள்கை உணர்­வு­டன் இருந்­த­தால் தன்­னால் வாழ்க்­கை­யில் நல்ல நிலைக்கு வர முடிந்­த­தா­க­வும் இவர் தெரி­விக்­கி­றார். ஆர்­வம் இருக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் பள்ளி வலி­யு­றுத்­தி­ய­தால் ஜெய­சுதா இன்று பல்­வேறு துறை­க­ளி­லும் பணி­

க­ளி­லும் மிகுந்த ஆர்­வம் காட்டி வரு­கி­றார். உதா­ர­ண­மாக, தமிழ் மொழி­யி­லும் பண்­பாட்­டி­லும் அவ­ரின் ஆர்­வத்­தைப் பெருக்­கிய இடமே ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­தான் என்று அவர் பகிர்ந்­து­ கொண்­டார். ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி தமிழ் ஆசி­ரி­யர், தனது தமிழை மெரு­கூட்டி தான் தமி­ழில் சிறந்து விளங்க வழி­வ­குத்­த­தா­கக் கூறு­கி­றார் ஜெய­சுதா. கட்­டு­ரைப் போட்­டி­கள், விவா­தப் போட்­டி­கள், தன்­னை­விட இளைய மாண­வர்களுக்­குப் பயிற்சி அளிக்­கும் வாய்ப்­பு­கள் போன்­ற­வற்­றால் தனக்கு தமி­ழின்­பால் ஈடு­பாடு அதி­க­ரித்­த­தாக நினை­வு­கூர்ந்­தார். அன்று ராஃபிள்ஸ் பெண்­கள் பள்ளி தன்­னுள் விதைத்த தமி­ழார்­வமே, இன்று தமிழ் சமூ­கத்­திற்­குப் பெரி­த­ள­வில் பங்­காற்ற தனக்கு உற்­சா­கம் அளித்­துள்­ளது என்­கி­றார்.

"நாம்­தான் மாற்­றத்­தின் விதை­கள் - தமிழ் அடை­யா­ளத்­தைப் பரந்த உல­கிற்­குக் கொண்டு செல்­வதை உறுதி செய்­வது நம் கடமை," என்று திரு­மதி ஜெய­சுதா தமிழ் மாண­வர்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

ராஃபிள்ஸ் பெண்­கள் பள்­ளி­யில் எப்­படி அனை­வ­ரும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் துணை­யாக இருந்து எவ்­வாறு முன்­வந்­தார்­களோ அதே­போல, நம்­மைச் சுற்றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என ஜெய­சுதா கூறி­னார். சாதனை புரி­யும்­போது நம் வாழ்க்­கை­யில் துணை­யாக இருந்த பெற்­றோர்­கள், ஆசி­ரி­யர்­கள், நண்­பர்­கள், சகோ­த­ரர்­கள், பயின்ற பள்ளி, தமிழ் சமு­தா­யம் ஆகிய எந்­தத் தரப்­பை­யும் மறக்­கா­மல் நன்­றிக்­க­ட­னு­டன் இருப்­பது முக்­கி­யம் என்கிறார் இவர்.