பணியிடங்களில் இணக்கத்தை வலியுறுத்த கூடுதல் முத்தரப்பு வழிகாட்டிகள்

2 mins read
97c883af-610d-41a5-880d-3f27263533f6
-

வேலை­யி­டத்­துக்கு அப்­பாற்­பட்ட விவ­கா­ரங்­களை ஆத­ரிக்­கும் ஊழி­யர்­களை பணி­யி­டங்­களில் எந்த வகை­யி­லும் அச்­சு­றுத்­தவோ ஒதுக்கி வைக்­கவோ கூடாது என்று கூறும் மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை நிய­மன வழி­காட்­டி­கள் அடுத்த மாதம் நடப்­புக்கு வரும்.

அத்­து­டன், வேலைக்­குத் தொடர்­பில்­லாத நிகழ்ச்­சி­கள், திட்­டங்­கள், கொள்­கை­கள் ஆகி­ய­வற்றை திட்­ட­மிட்டு, விளம்­ப­ரப் படுத்தி, நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது ஊழி­யர்­கள் பல்­வகை கலா­சா­ரங்­கள், பண்­பு­கள், நம்­பிக்­கை­கள் ஆகி­ய­வற்­றைக் கொண்­டுள்­ளதை முத­லா­ளி­கள் கருத்­தில் கொள்­ள­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­படும்.

மேலும், ஊழி­யர்­கள் தங்­கள் குறை­க­ளைத் தெரி­விக்க முத­லா­ளி­கள் பாது­காப்­பான சூழலை உரு­வாக்­க­வேண்­டும் என்று வழி­காட்­டி­கள் குறிப்­பி­டும். குறை­களைக் கையா­ளும் ஒழுங்­கான நடை­மு­றையை உரு­வாக்­கு­வ­தும் அவற்­றில் அடங்­கும்.

இந்­தப் புதிய வழி­காட்­டி­கள், நியா­ய­மான வேலை நிய­மன நடை­முறை குறித்த முத்­த­ரப்பு வழி­காட்­டி­களில் சேர்க்­கப்­படும் என்று மனி­த­வள அமைச்சு, தேசியத் தொழிற்­சங்க காங்­கி­ரஸ், சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் ஆகி­யவை அதை நேற்று கூட்­டா­கத் தெரி­வித்­தன. அடுத்த மாதம் நடுப்­ப­கு­தி­யில் இந்த விரி­வான வழி­காட்­டி­கள் நடப்­புக்கு வரும்.

அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய, இணக்­க­மான பணி­யி­டத்­தின் முக்­கி­யத்­து­வத்தை முத­லா­ளி­கள் தொடர்ந்து எடுத்­துக்­காட்­ட­வும் எடுத்­து­ரைக்­க­வும் செய்­ய­வேண்­டும் என்று அந்த முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் கூறின.

வேலை தொடர்­பான நடை­முறை­க­ளின்­ப­டி­தான் ஊழி­யர்­ களின் செயல்­தி­றன், பதவி உயர்வு போன்­றவை மதிப்­பி­டப்­பட வேண்­டும் என்­றும் வழி­காட்­டி­கள் குறிப்­பி­டும். வேலை­யு­டன் தொடர்­பில்­லாத நிகழ்ச்­சி­கள், திட்­டங்­கள் அல்­லது கொள்­கை­கள் ஆகி­ய­வற்­றில் பங்­கெ­டுக்­கும்­படி ஊழி­யர்­கள் அழுத்­தத்தை அல்­லது கட்­டா­யத்தை எதிர்­நோக்­கக் கூடாது என்­றும் கூறப்­பட்­டுள்­ளது. அவற்றை ஆத­ரிக்­கா­த­தால் அல்­லது அவற்­றில் கலந்­து­கொள்­ளா­த­தால் வேலை பாதிக்­கப்­படக்­கூ­டாது என்­றும் வழி­காட்­டி­கள் எடுத்­து­ரைக்­கும்.

வேலை­யி­டத்­தில் வேலைக்­குத் தொடர்­பில்­லாத பல்­வேறு விவ­கா­ரங்­க­ளுக்கு ஆத­ர­வு­தர உல­க­மெங்­கும் உள்ள முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் கூடு­தல் முயற்­சி­கள் எடுத்து வரு­வ­தை­யும் முத்­த­ரப்­புப் பங்­கா­ளி­கள் சுட்­டின. இச்­சூ­ழ­லில் பல்­வேறு நம்­பிக்­கை­கள், திறன்­கள், பின்­ன­ணி­கள் உள்ள ஊழி­யர்­களைத் தொடர்ந்து மதிக்­கும் பணி­யி­டங்­களை உரு­வாக்­கு­ வ­தன் முக்­கி­ய­த்துவத்­தைப் வழி­காட்­டி­கள் வலி­யு­றுத்­தும்.