வசதிகுறைந்த மாணவர்க்கு கூடுதல் உதவி

வசதிகுறைந்த மாணவர்க்கு கூடுதல் உதவி

2 mins read
e15138cd-2139-4de9-a3f8-209a3505896c
-

சுயேச்­சைப் பள்­ளி­கள் அல்­லது நிபு­ணு­வத்­தும் பெற்ற சுயேச்­சைப் பள்­ளி­களில் படிக்­கும் வசதி குறைந்த மாண­வர்­கள் தங்­கள் செல­வு­க­ளைச் சமா­ளிக்க கூடு­தல் உதவி பெறு­வார்­கள்.

கல்வி அமைச்சு வழங்­கி­வ­ரும் அப்­லி­ஃப்ட் உப­கா­ரச்­சம்­ப­ளத்­தின்­கீழ் அளிக்­கப்­படும் தொகை உய­ரும். முன்பு $800 வெள்ளி ரொக்­கம் வழங்­கப்­பட்ட நிலை­யில் இவ்­வாண்­டி­லி­ருந்து அத்­தொகை $1,000ஆக உய­ரும்.

மேலும், உப­கா­ரச்­சம்­ப­ளத்­துக்­குத் தகு­தி­பெ­று­வ­தற்­கான அதி­க­பட்ச குடும்ப வரு­மா­னம் உயர்த்­தப்­படும். இவ்­வாண்­டி­லி­ருந்து $4,400 மாதாந்­திர நிகர குடும்ப வரு­மா­னம் அல்­லது $1,100 தனி­ந­பர் வரு­மா­னம் உள்ள குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் உப­கா­ரச்­சம்­ப­ளத்­துக்­குத் தகுதி பெறு­வர். முன்பு அது அதி­க­பட்­சம் $2,750 மாதாந்­திர குடும்ப வரு­மா­னம் என்­றும் $690 தனி­ந­பர் வரு­மா­னம் என்­று­மி­ருந்­தது.

அப்­லி­ஃப்ட் உப­கா­ரச்­சம்­ப­ளம் சிங்­கப்­பூர் கும­டிக்­க­ளுக்கு மட்­டும் வழங்­கப்­ப­டு­கிறது. அறி­விக்­கப்­பட்­டுள்ள மாற்­றங்­க­ளால், ஆண்­டுக்கு மேலும் 230 மாண­வர்­கள் பயன்­பெ­று­வர் என்று கல்வி அமைச்சு கூறி­யது. தற்­போது ஆண்­டுக்கு சுமார் 470 மாண­வர்­கள் அந்த உத­வி­யைப் பெற்று வரு­கின்­ற­னர்.

"இன்­னும் அதி­க­மான தகு­தி­பெ­றும் மாண­வர்­கள் அப்­லி­ஃப்ட் உப­கா­ரச்­சம்­ப­ளத்­தின் மூலம் பயன்­பெ­ற­வும் அவர்­களின் பல்­வ­கைத் திறன்­க­ளுக்கு கைகொ­டுக்­க­வும் இந்த மாற்­றங்­கள் உத­வும் என்று நம்பு­கி­றோம்," எனக் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

நிதிப் பிரச்­சி­னை­யால் சுயேச்­சைப் பள்­ளி­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கத் தயங்­கும் மாண­வர்­களுக்கு கூடு­தல் நிதி உதவி அளிப்­பது உப­கா­ரச்­சம்­ப­ளத்­தின் நோக்­கம். சிங்­கப்­பூ­ரின் சிறந்த பள்­ளி­களில் பணக்­கா­ரக் குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் அதி­க­மா­கப் படிக்­கின்­ற­னர் என்று கவலை எழுந்­துள்ள நிலை­யில், அப்­பள்­ளி­களில் பன்­மு­கத்­தன்­மையை அதி­க­ரிக்க அது­போன்ற முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.