கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றும் மோசடியில் பங்கெடுத்த 18 வயது இளம்பெண், தாமும் மேலும் ஏழு பேரும் போலியாக வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று அவற்றின் வழி $600,000 பணத்தைப் பரிவர்த்தனை செய்ய உதவியதை ஒப்புக்கொண்டார்.
ஒசிபிசி வங்கி கணக்குகளில் மோசடி செய்து பணத்தை வெளிநாட்டுக் கும்பல்களிடம் அனுப்ப அவர் உதவினார். குறிப்பாக மோசடி செய்யப்பட்ட பணத்தில் $100,000க்கு மேற்பட்ட தொகையை அவர் தானியங்கி இயந்திரங்களிலிருந்து பெற்று அவரது கூட்டாளிகளுக்குத் தந்தார். அதற்காக அவர் $1,000ஐ சன்மானமாகப் பெற்றார்.
மோசடிக்கு உதவிய இளையர்களில் அவர் ஒருவர் மட்டும் பெண். குற்றங்கள் நடந்தபோது அவருக்கு 16, 17 வயது இருக்கும் என்பதால் அவரது பெயரை வெளியிட முடியாது.

