நம்பிக்கை குறைந்த நிலையில் உற்பத்தி தொழில்துறையினர்

நம்பிக்கை குறைந்த நிலையில் உற்பத்தி தொழில்துறையினர்

1 mins read
7ea5a7b4-5f75-473f-bcaf-b51caa9dbd53
சிங்கப்பூர் உற்பத்தித் துறையினர், அடுத்த ஆறு மாத காலத்தில் தொழில்துறை வாய்ப்புகள் அவ்வளவாக நன்றாக இருக்காது என்றே கருதுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் உற்பத்தித் துறையினர், அடுத்த ஆறு மாத காலத்தில் தொழில்துறை வாய்ப்புகள் அவ்வளவாக நன்றாக இருக்காது என்றே கருதுகிறார்கள்.

தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக இப்படிப்பட்ட கருத்து அவர்களிடம் நிலவுகிறது. அதேவேளையில், சேவைத் துறையைச் சேர்ந்தவர்களிடம் நம்பிக்கைப் போக்கு கொஞ்சம் குறைந்து இருக்கிறது.

தனித்தனியான இரண்டு காலாண்டு ஆய்வு முடிவுகள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தொழில்துறைச் சூழல் அவ்வளவாக அனுகூலமாக இருக்காது என்று எதிர்பார்க்கும் உற்பத்தித் துறையினர் முந்தைய காலாண்டு ஆய்வைவிட இப்போது அதிகம் என்று பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

அதேபோல, சேவைத் துறை யைச் சேர்ந்தவர்களிடம் நம்பிக்கைப் போக்கு குறைந்து இருப்பதாக புள்ளியியல் துறை நடத்திய ஆய்வு கூறுகிறது.

போக்குவரத்துப் பொறியியல் துறையைத் தவிர இதர எல்லா உற்பத்தித்தொழில் குழுமங்களும் அடுத்த ஆறு மாதத்தில் நிலவரங்கள் அனுகூலமாக இருக்காது என்றே நம்புகின்றன. மின்னணுத் துறையில்தான் நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது.

போக்குவரத்துப் பொறியியல் துறையில் நம்பிக்கையுடன் உள்ள நிறுவனங்கள் அதிகம்.