4 வாகனங்கள் விபத்து: எட்டுப் பேர் காயம்

4 வாகனங்கள் விபத்து: எட்டுப் பேர் காயம்

1 mins read
8e5f39fd-72ae-45df-8215-5c0faa47cb07
விபத்து, அங் மோ கியோ அவென்யூ 1க்குச் செல்லும் வாயிலுக்கு முன்னதாக நிகழ்ந்தது. படம்: எஸ்ஜி விஜிலாண்டெ ஃபேஸ்புக் பக்கம் -

ஆயர் ராஜா விரைவுச் சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நேற்றுக் காலை நான்கு வாகனங்கள் விபத்தில் சிக்கின. அதையடுத்து எட்டு பேர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

விபத்து, அங் மோ கியோ அவென்யூ 1க்குச் செல்லும் வாயிலுக்கு முன்னதாக நிகழ்ந்தது. விபத்தில் பேருந்து, லாரி, டாக்சி, கார் ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டு இருந்தன.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட எட்டு பேர், 22 வயது முதல் 60 வரை வயது உள்ளவர்கள். விபத்து பற்றி புலன் விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.