ஹவ்காங்கில் முதல் சமூக இலவச சட்ட உதவி நிலையம்

பொன்­மணி உத­ய­கு­மார்

சட்ட ஆலோ­சனை அனை­வ­ருக்­கும் சென்­ற­டைய வேண்­டும் என்ற நோக்­கில் ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்பு ஹவ்­காங் அவென்யூ 5ல் சமூக இலவச சட்ட உதவி நிலை­யம் ஒன்றை நேற்று முன்தினம் திறந்­தது.

‘டியன் ட’ கோயில் வளா­கத்­தில் இது அமைந்­துள்­ளது.

நிலை­யத்­தின் திறப்பு விழா­வில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரும் சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்­டார்.

சிறந்த சட்ட அமைப்­பைக் கொண்­டி­ருப்­ப­தோடு அந்­தச் சட்­டம் அனை­வ­ரும் அணு­கக்­கூ­டி­ய­மு­றை­யில் இருப்­பதை உறு­தி­செய்­வ­தும் அவ­சி­யம் என்று அமைச்­சர் தமது உரை­யில் கூறி­னார்.

நிதி, குடும்­பம், சமூ­கம் ஆகி­ய­வற்­றில் ஏற்­ப­டக்­கூ­டிய சிக்­கல்­களைச் சமா­ளிக்க இந்­நி­லை­யம் உத­வு­மென்­றார் அமைச்­சர்.

இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு, மேலும் நான்கு குடி­யி­ருப்­புப் பேட்­டை­களில் இத்­த­கைய நிலை­யங்­கள் திறக்­கப்­படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி ‘புரோ போனோ எஸ்ஜி’, ‘ஆர் எஸ் சால­மன்’ அறக்­கட்­டளை, சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கம், ‘டியன் ட’ கோயில் ஆகி­ய­வற்­றுக்கு இடை­யில் கையெ­ழுத்­தான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­தின் ஓர் அங்­க­மாக இந்த நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

“சட்­டம் குறித்த அறி­தல் இல்­லா­மலோ எங்கு சென்று உதவி நாடு­வ­தென அறி­யா­மலோ இருப்­ப­வர்­கள் இங்கு ஆலோ­சனை பெற்­றுக்­கொள்­ள­லாம்,” என்று ‘புரோ போனோ எஸ்ஜி’ அமைப்­பின் தலை­வர் கிரெ­கரி விஜ­யேந்­தி­ரன்­கூ­றி­னார்.

தேசிய அள­வில் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் சட்ட உத­வித் திட்­டங்­க­ளின் தகுதி வரம்­பு­க­ளுக்­குள் உட்­ப­டா­த­வர்­கள் இந்த சமூக இலவச சட்ட உதவி நிலை­யத்தை அணு­க­லாம். எடுத்­துக்­காட்­டாக, சிங்­கப்­பூ­ரர்­க­ளின் வாழ்க்­கைத் துணை, பெற்­றோர் ஆகி­யோ­ர் வெளிநாட்­டுக் குடி­யு­ரிமை கொண்­டிருந்தாலும் இங்கு சட்ட உதவி பெற­லாம்.

சமூக சேவைத் துறை­யு­டன் அணுக்­க­மாக இந்­நி­லை­யம் செயல்­படும்.

“குடும்­பச் சேவை நிலை­யங்­களுக்கு அருகே சட்ட உதவி நிலை­யங்­கள் அமை­வ­தால் சட்­டச் சிக்­கல்­கள், சமூ­கப் பிரச்­சினை ஆகி­ய­வற்­றால் அவ­தி­யு­றும் மக்­க­ளுக்கு எளி­தில் உதவ முடி­யும்,” என்று குடும்­பச் சேவை நிலை­யங்­க­ளின் சமூக சேவ­கர் கௌசல்யா சிங் கூறி­னார்.

குறிப்­பாக வட­கி­ழக்கு வட்­டா­ரத்­தில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு இந்த நிலை­யம் பேரு­த­வி­யாக அமை­யும் என்­றார் அவர்.

மக்­கள் அதி­கம் எதிர்­நோக்­கக் கூடிய சட்­டச் சவால்­களை சமா­ளிக்­கும் வழி­மு­றை­கள் பற்­றிய அறி­தலை அதி­க­ரிக்­கும் முயற்­சி­க­ளி­லும் நிலை­யம் ஈடு­படும்.

அதோடு சமூ­கத் தலை­வர்­கள் நேர­டி­யாக வழக்­க­றி­ஞர்­க­ளு­டன் உரை­யாட உதவி, அவர்­க­ளுக்கு எழும் சட்ட உதவி சார்ந்த சந்­தே­கங்­க­ளை­யும் இது தீர்க்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!