மூன்று மாதப் புதுப்பிப்புப் பணி களுக்குப் பிறகு நியூட்டன் உணவங்காடி நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது. நிலையத்தின் 82 கடைகளில் பாதி நேற்று பிற்பகலில் திறந்திருந்தன.
நல்ல கூட்டம் இருந்ததாகவும் நியூட்டன் உணவு நிலைய உணவங்காடிக்காரர்கள் சங்கத் தலைவர் ரிச்சர்ட் டோ டெக் புவே கூறினார்.
2022 நவம்பரில் தொடங்கிய புதுப்பிப்புப் பணிகளின்போது தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற தேசிய சுற்றுப்புற அமைப்பு முன்வைத்த அழைப்பை எந்தக் கடைக்காரரும் ஏற்கவில்லை என்றார் திரு டோ.
நியூட்டன் உணவு நிலையம் வரும் ஞாயிறு 5ஆம் தேதி அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும்.

