திருப்பதி மாட வீதியில் புகுந்த கார்

திருப்பதி மாட வீதியில் புகுந்த கார்

2 mins read
559f5194-3d71-4a78-ae84-e7e03a23f87b
திருப்­பதி: திருப்­பதி கோயி­லில் நான்கு அடுக்கு பாது­காப்பை மீறி மாட வீதி வழி­யாக புஷ்­க­ரணி மண்­ட­பம் வரை ஒரு கார் சென்­ற­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. படம்: மயிலம் குமார் -

திருப்­பதி: திருப்­பதி கோயி­லில் நான்கு அடுக்கு பாது­காப்பை மீறி மாட வீதி வழி­யாக புஷ்­க­ரணி மண்­ட­பம் வரை ஒரு கார் சென்­ற­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அங்­கி­ருந்து முக்­கிய விருந்­தி­னர் மற்­றும் அதி­முக்­கிய விருந்­தி­னர்­கள் கார் நிறுத்­தும் இடங்­க­ளுக்­கும் அந்­த கார் சென்­றுள்­ளது.

அங்கு இருந்த சிலர், கார் ஓட்­டு­ந­ரி­டம் விசா­ரித்­த­போது இந்­த கார் அமைச்­ச­ரின் கார் என்­றும் பின்­னர் இல்லை வேறு ஒரு­வ­ரு­டை­யது என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தச் சம்­ப­வம் பாது­காப்பு குறை ­பா­டு­களை வெட்ட வெளிச்­ச­மாக்கி­யுள்­ளன.

பிர­தான வாயி­லி­லி­ருந்து மாட வீதிக்கு நான்கு அடுக்கு பாது­காப்பை மீறித்­தான் செல்ல வேண்­டும். விஐபி மற்­றும் வி.வி.ஐ.பி.களின் கார்­கள் ராம் பகிச்சா எதிரே உள்ள பார்க்­கிங் வரை மட்­டுமே அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது. இந்­த கார் மட்­டும் பாது­காப்பு விதி­களை மீறி எப்­படி மாட வீதிக்கு சென்­றது என பக்­தர்­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

ஏற்­கெ­னவே கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் பலத்த பாது­காப்­பை­யும் மீறி தனி­யார் நிறு­வ­னத்­தி­னர் ஸ்ரீ பேடி ஆஞ்­ச­நே­யர் கோவி­லி­லி­ருந்து ஏழு­ம­லை­யான் மூல­வர் கோபு­ரம் வரை வானூர்தி கேமரா மூலம் காணொ­ளி­யைப் பதிவு செய்து சமூக ஊட­கங்­களில் பதி­விட்­ட­னர்.

இந்­தக் காணொளி சமூக ஊட­கங்­களில் பர­வி­ய­தால் பக்­தர்­கள் மற்­றும் வேத பண்­டி­தர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

இந்த நிலை­யில் தற்­போது பாது­காப்பை மீறி கார் சென்­றது குறித்து முதன்மை செயல் அலு­வ­லர் தர்­மா­ரெட்டி, திருப்­பதி தேவஸ்­தா­னத்­திற்கு நன்­கொடை வழங்க வந்த கார் வழி தவறி மாட வீதி­களில் சென்று இருக்­க­லாம். பாது­காப்பு அதி­கா­ரி­கள் எப்­படி மாட வீதிக்கு காரை அனு­ம­தித்­த­னர் என்­பது குறித்து விசா­ரணை நடத்­தப்­படும் என்று கூறி­யுள்­ளார்.

திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லுக்கு பயங்­க­ர­வா­தி­கள் அச்­சு­றுத்­தல் உள்­ள­தால் 24 மணி நேர­மும் துப்­பாக்கி ஏந்­திய பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. மேலும் பயங்­க­ர­வா­தி­கள் தாக்­கு­தல் நடத்­தி­னால் அதை முறி­ய­டிக்­கும் வித­மாக 'ஆக்­டோ­பஸ்' படை­யைச் சேர்ந்­த­வர்­கள் தயார் நிலை­யில் உள்­ள­னர்.