ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சியில் சிங்பாஸ் மூலம் சேர ஏற்பாடு

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சியில் சிங்பாஸ் மூலம் சேர ஏற்பாடு

2 mins read
5a30c76c-58d2-4b3f-943a-d87eee12fc5b
-

பெரியவர்களுக்கான கல்வி, பயிற்சிக்கு மேம்பட்ட உருமாற்றுத் திட்டம் அறிவிப்பு

சிங்கப்பூரர்களின் தேர்ச்சிகளை ஆயுள் முழுவதற்கும் மேம்படுத்து வதற்காகச் செயல்படும் ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் பயிற்சிக் கல்விகளில், சிங்பாஸ் அடிப்படையிலான ஒரு புதிய முறை மூலம் சேர்வதற்கான புதிய ஏற்பாடு, வரும் செப்டம்பர் இறுதியில் தொடங்கப்படும்.

பெரியவர்களுக்கான கல்வி, பயிற்சி தொழில்துறைக்கு உரிய மேம்படுத்தப்பட்ட உருவமாற்று வழிகாட்டித் திட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்தப் புதிய முறை நடப்புக்கு வருகிறது.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி டான் கோக் யாம் நேற்று இவற்றை அறிவித்தார்.

அரசாங்க தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகமும் பொதுக் கணக்குக் குழுவும் 2022ல் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்புக்குச் சங்கடம் ஏற்படும் வகையில் அறிவிப்பு விடுத்தன.

அதாவது சுமார் $4.22 மில்லியன் மானியத்தை விநியோகிக்கும் அளவுக்கு அந்த அமைப்பிடம் குறைபாடுகள் இருந்ததாக அவை தெரிவித்தன.

இதனை அடுத்து சிங்பாஸ் அடிப்படையிலான ஒரு புதிய முறை நடப்புக்கு வருகிறது.

சேண்ட்ஸ் கண்காட்சி மாநாட்டு நிலையத்தில் நேற்று பெரியோருக்கான கல்வி, பயிற்சி மாநாடு நடந்தது.

கல்வி, மனிதவள துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங், அதில் பெரியவர்களுக்கான கல்வி, பயிற்சித் தொழில்துறைக்கு உரிய மேம்படுத்தப்பட்ட உருமாற்று வழிகாட்டித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

சிங்கப்பூர் எதிர்காலத்திற்கான பொருளியலை ஆயத்தமாக்குகிறது. அதற்குத் தேவைப்படும் பயிற்சிகளுக்குத் தோதாக இந்தத் தொழில்துறையை மேம்படுத்துவது அந்தத் திட்டத்தின் முக்கியமான உத்தியாகும் என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.

பெரியவர்களுக்கான கல்வி, பயிற்சி தொழில்துறையில் 4,300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 23,000 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இந்தத் துறையின் புத்தாக்க, மின்னிலக்க முயற்சிகளை அதிகப்படுத்துவது, வயதுவந்தோருக்குப் போதிக்கும் வல்லுநர்களுக்கான பயிற்சியில் முதலிடுவது, அனைத்துலகமயமாவது ஆகியவை உருமாற்றுத் திட்டத்தின் இதர உத்திகளாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திருவாட்டி கான், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் மானியத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்தார்.

அத்தகைய குற்றங்களைச் செய்வோருக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு இருப்பதை அவர் சுட்டினார்.