தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$645,000 முன்பணத்தை இழந்த பயனீட்டாளர்கள்

2 mins read
8b0fb9ee-48d9-4f80-8ed7-611eb61b28b7
-

சிங்­கப்­பூ­ரில் முன்­ப­ண­மாக கட்­டிய ஏறக்­கு­றைய 645,000 வெள்­ளியை பய­னீட்­டா­ளர்­கள் இழந்­துள்­ள­னர்.

ஒப்­ப­னைத் துறை­யில் அதிக தொகையை வாடிக்­கை­யா­ளர்­கள் இழந்­த­னர். இதற்கு அடுத்­த­தாக பய­ணத் துறை­யில் அதிக தொகை இழக்கப்பட்டு உள்ளது.

2021ஆம் ஆண்­டில் இழந்த மொத்த முன்­ப­ணம் 520,000 வெள்ளி. இத­னு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2022ல் இழந்த தொகை 24 விழுக்­கா­டு அதி­க­ரித்­தது.

சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் நேற்று வெளி­யிட்ட வரு­டாந்­திர புகார்­கள் தொடர்­பான புள்ளி விவர அறிக்­கை­யில் இந்த விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­பட்­டன.

ஒப்­ப­னைத் துறை­யில் பய­னீட்­டா­ளர்­கள் இழந்த மொத்த முன்­ப­ணத்­தின் மதிப்பு 285,000 வெள்ளி.

இது, ஆண்­டின் மொத்த இழப்­பீட்­டில் சுமார் 44 விழுக்­கா­டா­கும்.

பய­ணத்­து­றை­யில் 22 விழுக்­காடு, அதா­வது 141,000 வெள்­ளியை வாடிக்­கை­யா­ளர்­கள் இழந்­த­னர்.

ஒப்­ப­னைத் துறை­யில் சிகை அலங்­கா­ரம், தலை­முடி சிகிச்சை, உடற்­பி­டிப்பு போன்­வற்­றுக்­காக முன்­ப­ணம் கட்­டி­ய­வர்­கள் நிறு ­வ­னங்­கள் திடீ­ரென மூடப்­பட்­ட­தால் பணத்தை திரும்­பப் பெற முடி­யா­மல் போனது.

இதே­போல விமா­னப் பய­ணம் மற்­றும் ஹோட்­டல் அறை­க­ளுக்கு முன்­ப­ணம் செலுத்­தி­ய­வர்­கள் கொள்­ளை­நோய் பிரச்­சினை கார­ண­மாக முன்­ப­திவை ரத்­து செய்­தா­லும் பணம் திரும்­பக் கிடைக்­க­வில்லை.

புதுப்­பிப்பு பணி­க­ளைச் செய்­யும் சிறிய நிறு­வ­னங்­களில் சில திடீ­ரென மூடப்­பட்­டன. இத­னால் புதுப்­பிப்பு ஒப்­பந்­த­தா­ரர்­க­ளி­டம் சுமார் $49,000 முன்­ப­ணத்தை வாடிக்­கை­யா­ளர்­கள் இழந்­துள்­ள­னர்.

இது குறித்து கருத்து தெரி­வித்த சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தின் தலை­வர் மெல்­வின் யோங், 2021ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் 2022இல் அதிக தொகையை வாடிக்­கை­யா­ளர்­கள் இழந்­தது கவ­லை­ய­ளிக்­கிறது என்று கூறி­யுள்­ளார்.

பொரு­ளி­யல் நிச்­ச­ய­மற்ற சூழ்­நி­லை­யில் இழப்பு அதி­க­ரித்­துள்­ள­தாக நம்­பப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில் முன்­ பணத்தை பாது­காக்­கும் சில நடை­மு­றை­களை அர­சாங்­கம் கொண்டுவர வேண்­டும் என்று பய­னீட்­டா­ளர் சங்­கம் கேட்­டுக்­கொண்­டது. குறிப்­பாக அதிக முன்­ப­ணத்தை வசூ­லிக்­கும் ஒப்­ ப­னைத் துறை, புதுப்­பிப்பு துறை­களில் அத்­த­கைய பாது­காப்பு நடை­மு­றை­கள் இருக்க வேண்டும் என்று சங்­கம் விரும்­பு­கிறது.