வேன் மோதி மூதாட்டி மரணம்

வேன் மோதி மூதாட்டி மரணம்

1 mins read
1c1b239c-69f0-43b1-a35b-715dc8de6eb1
கவனமின்றி வேனை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக, 60 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்டு உள்ளார். காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது. படம்: பிக்ஸாபே -

பாசிர் ரிஸ் வட்­டா­ரத்­தில் சென்ற மாதம் 27ஆம் தேதி, நடந்து சென்ற 68 வயது மாது ஒரு­வரை மோதிய வேன் பின்­னர் நிற்­கா­மல் சென்­ற­தா­கக் காவல்­துறை கூறி­யது.

சுய­நி­னை­வு­டன் மருத்­து­வ­மனைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்ட மாது பின்­னர் உயி­ரி­ழந்­ததாகக் கூறப்பட்டது.

பாசிர் ரிஸ் டிரைவ் ஆறு, பாசிர் ரிஸ் டிரைவ் ஒன்று ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான சாலைச் சந்­திப்­பில் நடந்த விபத்து குறித்து ஜன­வரி 27ஆம் தேதி காலை 6.05 மணிக்­குத் தக­வல் கிடைத்­த­தா­கக் காவல்­துறை கூறி­யது.

கவனமின்றி வேனை ஓட்டி மரணம் விளைவித்ததற்காக, 60 வயது ஆட­வர் கைது செய்­யப்­பட்டு உள்ளார். காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.