டாக்சி, தனியார் வாடகை கார் சேவை: பயணிகள் திருப்தி நிலை குறைந்தது

டாக்சி, தனியார் வாடகை கார் சேவை: பயணிகள் திருப்தி நிலை குறைந்தது

2 mins read
ab562eff-9825-4706-97aa-4e3af0a819c7
-

டாக்சி, தனி­யார் வாடகை கார் ஆகி­யவை சென்ற ஆண்டு வழங்­கிய சேவை­கள் குறித்து இங்­குள்ள பய­ணி­க­ளின் திருப்தி நிலை குறைந்­துள்­ளது.

பொதுப் போக்­கு­வ­ரத்து மன்­றத்­தின் வரு­டாந்­த­ரக் கருத்­தாய்­வில் இது தெரி­ய­வந்­தது.

டாக்சி சேவை­கள் குறித்த பய­ணி­க­ளின் திருப்தி நிலை, 2021ஆம் ஆண்­டில் சரா­ச­ரி­யாக 8.5 புள்­ளி­க­ளா­கப் பதி­வா­னது. சென்ற ஆண்டு அது 8.1ஆகக் குறைந்­தது. காத்­தி­ருக்­கும் நேரம் குறித்து அதி­க­மா­னோர் அதி­ருப்தி அடைந்­துள்­ள­னர்.

அதனை அடுத்து டாக்சி நிறுத்­தங்­கள் எளி­தில் அணு­கும் இடத்­தில் இல்லை எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சென்ற ஆண்டு தனி­யார் வாடகை கார்­கள் வழங்­கிய சேவைக்­கான திருப்தி நிலை­யும் 0.4 புள்ளி குறைந்­தது.

இதி­லும் காத்­தி­ருப்பு நேரம் குறித்து அதி­க­மா­னோர் அதி­ருப்தி அடைந்­த­னர். அடுத்த நிலை­யில் ஓட்­டு­நர் வழங்­கிய சேவை திருப்தி அளிக்­க­வில்லை என்று பய­ணி­கள் கூறி­னர்.

இரு பிரி­வு­க­ளை­யும் சேர்த்து 2022க்கான ஒட்­டு­மொத்த பய­ணி­கள் திருப்தி நிலை, 8 புள்­ளி­களா­கக் குறைந்­தது. அதற்கு முந்­தைய ஆண்டு அது 8.4ஆக இருந்­தது.

கருத்­தாய்வு, சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் 3ஆம் தேதிக்­கும் 14ஆம் தேதிக்­கும் இடை­யில் நடத்­தப்­பட்­டது.

இதில் டாக்சி அல்­லது தனி­யார் வாடகை காரில் பய­ணம் செய்­யும் 2,701 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

அவர்­கள் ஒரு வாரத்­தில் குறைந்­தது மூன்று முறை இத்­த­கைய சேவை­யைப் பயன்­ப­டுத்­தி­ய­வர்­கள். கருத்­தாய்­வில் பங்­கெ­டுத்த அன்­றும் டாக்சி, தனி­யார் வாடகை கார் சேவையை அவர்­கள் பயன்­ப­டுத்­தியதாகக் கூறப்பட்டது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் சென்ற ஆண்டு அகற்­றப்­பட்ட பிறகு இத்­த­கைய சேவை­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தது.ஆனால் அது சரி­வர ஈடு­கட்­டப்­ப­ட­வில்லை என்­ப­தைச் சுட்­டிய வல்­லு­நர்­கள், பய­ணி­க­ளின் அதிருப்­திக்கு இது கார­ண­மாக இருக்­கக்­கூ­டும் என்­ற­னர்.

கட்­ட­ணங்­கள் உயர்ந்­த­தால் முன்பு வழக்­க­மாக இச்­சே­வை­களை நாடிய பல­ரும் இப்­போது தவிர்ப்­ப­தா­கப் பய­ணி­கள் கூறு­கின்­ற­னர். கார் பகிர்­வுச் சேவை­கள் எளி­தில் கிடைப்­ப­தில்லை என்­பதை அவர்­கள் சுட்­டி­னர்.

டாக்சி அல்­லது வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளைப் பொறுத்­த­வரை கட்­டண உயர்வு மகிழ்ச்சி தரு­வ­தா­கவே இருக்­கும் என்­கின்­ற­னர் கவ­னிப்­பா­ளர்­கள். எரி­பொ­ருள் விலை உயர்வை அவர்­கள் சுட்டு­கின்­ற­னர்.