சோதனையில் புதிய வகை மின்மோட்டார் சைக்கிள்கள்

1 mins read
0bf31b3d-4fc1-462d-ad7e-833e1f4c17e7
-

வழக்­க­மான மின்­மோட்­டார் சைக்­கிள்­களில் தேவைக்­கேற்ப மின்­க­ல­னுக்கு மின்­னூட்­டம் செய்­ய­வேண்­டும். அதற்­குச் சில மணி நேரம் பிடிக்­கும். மின்­னூட்­டம் முடி­யும்­வரை வாக­னத்­தைப் பயன்­ப­டுத்த இய­லாது.

இத்­த­கைய சிக்­கல்­க­ளுக்­குத் தீர்­வு­காண சிங்­போஸ்ட் நிறு­வ­ன­மும் 'மோ பேட்­ட­ரிஸ்' நிறு­வ­ன­மும் இணைந்துள்ளன.

மின்­னாற்­றல் தீர்ந்­தால் அந்த மின்­க­ல­னைக் கொடுத்­து­விட்டு மின்­னூட்­டம் செய்­யப்­பட்ட மின்­கலனை வாங்­கிப் பொருத்­திக்­கொள்­ள­லாம். மூன்று நிமி­டங்­களில் வாக­னம் பய­ணத்­தைத் தொட­ரத் தயா­ரா­கி­வி­டும்.

இத்­த­கைய மின்­மோட்­டார் சைக்­கிள்­கள் தற்­போது சோதிக்­கப்­ப­டு­வதாக இரு நிறு­வ­னங்­களும் நேற்று அறி­வித்­தன. நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் இதற்கு அனு­ம­தி வழங்­கி­யுள்­ளது.

நியூட்­டன், ஆர்ச்­சர்ட், தங்­ளின், புக்­கிட் தீமா ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய வட்டாரம் 9, 10 ஆகிய பகு­தி­களில் அஞ்­சல் விநி­யோ­கச் சேவைக்­குப் புதிய வகை மின்­மோட்­டார் சைக்­கிள்­கள் இரண்டு சோதிக்­கப்­ப­டு­கின்­றன.

அடுத்த மூன்று மாதங்­களுக்கு சோதனை முயற்சி நீடிக்­கும். இந்த கால­கட்­டத்­தில் புதிய வகை மின்­மோட்­டார் சைக்­கிள்­களை­யும் அவற்­றுக்­கான மின்­னூட்­டச் சேவை­க­ளை­யும் 'மோ பேட்­ட­ரிஸ்' நிறு­வ­னம் வழங்­கும் என்று சிங்­போஸ்ட் தெரி­வித்­தது.

புதிய ரக மின்­மோட்­டார் சைக்­கிள்­க­ளின் மின்­னூட்ட வசதி, எரி­பொ­ருள் ஆற்­றல், அவற்றை எளி­தா­கப் பயன்­ப­டுத்த முடி­கிறதா போன்ற அம்­சங்­கள் மதிப்­பி­டப்­படும்.

சிங்­போஸ்ட் 2026ஆம் ஆண்­டுக்­குள் அஞ்­சல் விநி­யோ­கத்­திற்கு மின்­மோட்­டார் சைக்­கிள்­களை மட்­டுமே பயன்­ப­டுத்­தக் கடப்­பாடு தெரி­வித்­துள்­ளது. அதன் தொடர்­பில் இந்­தச் சோதனை முயற்சி முக்­கி­யத்­து­வம் பெறு­வ­தாக சிங்­போஸ்ட் கூறி­யது.