பணவீக்க உயர்வு தொடரும்: டான்

பணவீக்க உயர்வு தொடரும்: டான்

1 mins read
812d2323-0bbe-47cb-8c48-e18318f0803e
-

சிங்கப்பூரில் இவ்வாண்டு முற் பாதியில் பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக இருக் கும். பிற்பாதியில் அது சற்று குறையும் என்று வர்த்தக, தொழில் துணை அமைச்சர் ஆல்வின் டான் நேற்று தெரி வித்தார். உலகளாவிய பணவீக்கம் மிதமாக உள்ளது. உள்ளூர் இறுக்கமான தொழிலாளர் சந்தை சற்று தளர்கிறது என்றும் அவர் கூறினார்.

"இவ்வாண்டு சிங்கப்பூரின் பணவீக்கம், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிலவரத்தைச் சார்ந்துள்ளது. அண்மைய காலமாக உலகளாவிய பணவீக்கம் உறுதியாக உள்ளது. உலகளாவிய எரிசக்தி, உணவுப் பொருள்களின் விலைகள், 2022ல் உச்சத்தைத் தொட்டதிலிருந்து அங்கேயே நிலைத்திருக்கிறது," என்றார் திரு டான்.

"உள்ளூர் அளவில், வர்த்த கங்கள் தாங்கள் எதிர்நோக்கும் இறக்குமதி, பயனீட்டு, தொழி லாளர் செலவுகளைப் பயனீட் டாளர்கள் பக்கம் திருப்பிவிடு கின்றனர். வாடகை வீடுகள், இறுக்கமான சிஓஇ ஒதுக் கீடுகள் ஆகியவற்றின் தேவை அதிகமாக இருப்பதால், கார் விலைகள் தொடர்ந்து உயர்வாக இருக்கும்," என்றும் திரு டான் தெரிவித்தார்.