ஜேகியூப் கட்டடம் அகலும்; 40 மாடி குடியிருப்பு எழும்

ஜேகியூப் கட்டடம் அகலும்; 40 மாடி குடியிருப்பு எழும்

2 mins read
de52c8bb-f643-46a1-a5f6-7ce2edbfd4a0
-

ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரலில் உள்ள கடைத்தொகுதி ஆகஸ்ட் 6ஆம் தேதி மூடப்படும்

ஜூரோங் ஈஸ்ட் சென்ட்­ர­லில் இருக்­கும் ஜேகி­யூப் கடைத்­தொகு­திக் கட்­ட­டம் ஆகஸ்ட் 6ஆம் தேதி மூடப்­படும். அந்­தக் கட்­ட­டம் இடிக்­கப்­பட்டு அந்த இடத்­தில் 40 மாடி குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் எழும்.

புதிய கட்­ட­டத்­தின் முத­லாம், இரண்­டாம் மாடி­களில் கடை­கள் இருக்­கும். அது 2027ல் கட்டி முடிக்­கப்­படும்.

ஜூரோங் லேக் வட்டாரத்தில் புதிய வீடு­க­ளை­யும் நிறு­வ­னங்­களை­யும் பொழு­து­போக்கு வசதி­க­ளை­யும் இதர பல வச­தி­களை­யும் ஏற்­ப­டுத்­து­வது அர­சாங்­கத்­தின் திட்­ட­மாக இருக்­கிறது.

அந்­தத் திட்­டத்­திற்கு உறு­துணை­யா­கத் திக­ழும் வகையில் ஜேகி­யூப் கடைத்­தொ­கு­தி இடிக்­கப்­பட்டு புதிய குடி­யிருப்­புக் கட்­ட­டம் கட்­டப்­ப­டு­கிறது.

கேப்­பிட்­ட­லேண்ட் டெவலப்­மெண்ட் நிறு­வ­னம் நேற்று அறிக்கை ஒன்­றில் இந்த விவ ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

ஜேகி­யூப் கடைத்­தொ­குதி ஆகஸ்ட் 6ஆம் தேதி இரவு 10 மணிக்கு மூடப்­படும். அங்கு இப்­போது தொழில் நடத்­தும் குத்தகை­ யா­ளர்­க­ளு­டன் இந்த நிறு­வனம் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு அவர்­க­ளுக்­குத் தேவை­யான ஆதரவை வழங்கி வரு­கிறது.

இதன்­ மூ­லம் குத்­த­கை­யா­ளர்கள் பிரச்­சினை எது­வு­மின்றி இடத்தை ஒப்­ப­டைக்க வழி ஏற்­படுத்­தப்­படும்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

புதி­தாக கட்­டப்­படும் குடி­யிருப்புக் கட்­ட­டம் ஜூரோங் ஈஸ்ட் எம்­ஆர்டி முனையத்­து­டன் நேர­டி­யாக இணைக்­கப்­படும்.

ஜூரோங் லேக் வட்டாரத்தில் அமை­ய­வி­ருக்­கும் கூரை­யு­டன் கூடிய மேல்­மட்ட நடை­பாதை கட்­ட­மைப்­பாக உரு­வா­கும் ஜே-வாக் வழி­யாக வெஸ்ட்­கேட், ஐஎம்­எம் கட்­ட­டம் ஆகி­ய­வற்­றுக்கு அந்­தப் புதிய குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தில் இருந்து வச­தி­யா­கச் செல்­ல­லாம்.

ஜூரோங் ஈஸ்ட் எம்­ஆர்டி முனை­யம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு வழித்­தடங்­க­ளுக்­குச் சேவை­யாற்­று­கிறது.

அது, எதிர்­கா­லத்­தில் அமை­யக்­கூ­டிய ஜூரோங் வட்­டார வழித்­த­டத்­து­டன் இணைக்­கப்­படும். இந்­த வட்­டார வழித்­த­டம் 2027 முதல் கட்­டம் கட்­ட­மா­கச் செயல்­ப­டத் தொடங்­கும்.

ஜூரோங் ஈஸ்ட் முனை­யம், 2030 முதல் கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­ப­ட­வுள்ள குறுக்குத் தீவு வழித்­த­டத்­திற்­கும் சேவை­ஆற்­றும். 'ஜூரோங் ஈஸ்ட் ஒருங்­கிணைந்த போக்­கு­வ­ரத்து மையம்' என்ற அதி­ந­வீன வளா­கத்­து­டன் அந்­தக் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் இணைக்­கப்­படும்.

அந்த மையத்­தில் குளிரூட்டி வசதி­ உள்ள பேருந்து முனை­யம், பொது நூல­கம், சமூக மன்­றம், விளை­யாட்டு நிலை­யம் உள்­ளிட்ட பல வச­தி­களும் இருக்­கும்.

ஜூரோங் லேக் வட்டாரம், மத்திய வட்­டா­ரத்­திற்கு வெளியே சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய தொழில்­துறை வட்டாரமாக உரு­வெ­டுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது.

அது 2040, 2050 ஆண்­டு­களுக்கு இடை­யில் 20,000 புதிய வீடு­க­ளு­டன் திக­ழும். நூறாயிரம் பேருக்கு வேலை கொடுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.